இந்த ஊர்லதான் அதிக கோடீஸ்வரங்க இருக்காங்க…
ஹூரூன் குளோபல் ரிச் லிஸ்ட் என்ற புள்ளி விவர பட்டியல் அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் உலகின் பல நாடுகளிலும் உள்ள பெரும் பணக்காரர்கள் குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தாண்டுக்கான பட்டியலில் இந்தியாவில் 187 பெரும்பணக்காரர்கள் உள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.இதில் அதிகபட்சமாக மும்பையில் மட்டும் 66 பெரும் பணக்காரர்கள் இருக்கின்றனர். டெல்லியில் 39 கோடீஸ்வரர்களும்,பெங்களூருவில் 21 பெரும் செல்வந்தர்களும் இருப்பதாக கணக்கெடுக்கப்பட்டுள்ளது. உலகத்திலேயே அதிக பணக்காரர்களை உருவாக்கும் 3வது நாடு இந்தியா என்றும் ஹூரூன் அறிக்கை தெரிவிக்கிறது. கடந்தாண்டைவிட இந்தாண்டு புதிதாக 16 பெரும்பணக்காரர்கள் இந்தியாவில் அதிகம் உருவாகியுள்ளனர். இந்தியாவில் உள்ள பெரும்பணக்காரர்களில் நிறைய பேர் மருத்துவத்துறை சார்ந்த தொழில் செய்பவர்களாக உள்ளனர்.இதற்கு அடுத்த இடத்தில் வாடிக்கையாளர்கள் வாங்கும் பொருட்களை விற்பவர்களாக இருக்கின்றனர். உலகிலேயே அதிக பணம் வைத்திருக்கும் மருந்துத்துறை அதிபர் என்ற பெருமையை சீரம் இன்ஸ்டியூட் நிறுனத்தின் தலைவராக உள்ள சைரஸ் பூனாவாலா உள்ளார். அவருக்கு 27 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்துகள் உள்ளன. இதற்கு அடுத்த இடத்தில் சன் பார்மா நிறுவனத்தின் அதிபர்கள் உள்ளனர். பைஜூ நிறுவனத்தின் இணை நிறுவனரான பைஜூ ரவீந்திரன் கல்வித்துறையில் உலகிலேயே இரண்டாவது பெரிய தொழில்முனைவோர் என்ற பெருமையை பெற்றுள்ளார். பைஜூஸ் குழுமத்தினர் உலகளவிலான பட்டியலில் 994வது இடத்தில் உள்ளனர்.இவர்களின் சொத்துமதிப்பு 3.3பில்லியன் டாலர்களாக உள்ளது. விமானத்துறை வைத்திருப்பதில் இண்டிகோ விமான நிறுவத்தைச் சேர்ந்த ராகேஷ் கங்கவால்,ராகுல் பாட்டியா உள்ளிட்டோர் மிகப்பெரிய செல்வந்தர்களாக உருவெடுத்துள்ளனர். இந்த பட்டியலில் ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவரான முகேஷ் அம்பானி மட்டும்தான், உலகளாவிய பட்டியலில் டாப் 10 இடங்களுக்குள் இடம்பிடித்திருக்கிறார்.82 பில்லியன் சொத்து மதிப்பை ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி வைத்துக்கொண்டுள்ளார். இந்த பட்டியலில் கவுதம் அதானியின் சொத்துமதிப்பு 53 பில்லியன் டாலராக சரிந்துள்ளது. 1 பில்லியன் டாலர்களை சம்பாதித்த பணக்காரர்களை கொண்ட நாடுகள் பட்டியலில் 6வது இடத்தில் இந்தியா உள்ளது. ஃசோகோ நிறுவனத்தின் ஸ்ரீதர் வேம்பு மற்றும் அவரின் சகோதரி ராதா வேம்பு ஆகியோரும் ஹூரூன் நிறுவன பட்டியலில் இடம்பிடித்துள்ளார். எச்.சி.எல் நிறுவனத்தின் உரிமையாளரான ஷிவ் நாடாரின் குடும்பத்தினர். 26பில்லியன் டாலராக உள்ளதாக அந்த நிறுவனம் கூறியுள்ளது.