முகேஷ் அம்பானியின் அசத்தல் திட்டம்..
பிரபல நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோவின் ஆரம்ப பங்கு வெளியீட்டு தயாராக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
100 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவுக்கு நிதி திரட்டவும் அந்நிறுவனம் திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
ஒரு பங்கின் விலை 1200 ரூபாயாக நிர்ணயிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. ஜியோ நிறுவனத்தின் வாடிக்கையாளர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் திட்டம் உள்ளதால் ரிலையன்ஸின் வருவாய் மேலும் அதிகமாகும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
2016-ல் தொடங்கப்பட்ட ஜியோ நிறுவனம் 2020-ல் தனியார் ஈக்விட்டிகளை உள்ளே அனுமதித்தனர். 2024 நிதியாண்டில் மட்டும் ஜியோ நிறுவனத்தின் வருவாய் 1 லட்சம் கோடி ரூபாயாகவும், லாபம் மட்டும் 20,607 கோடி ரூபாயாகவும் இருந்துள்ளது. இது ரிலையன்ஸின் மொத்த வருவாயில் 10-ல் ஒரு பங்காகும். இந்தியாவில் 5ஜி கட்டமைப்பை அமைக்க அதிக நிதியும், உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதும் அதிகமாகும், அதற்காக ஏற்கனவே 53,600 கோடி ரூபாய் அளவுக்கு நிதியை ரிலையன்ஸ் நிறுவனம் முதலீடாக போட்டிருந்தது. எனினும் சீனாவை வேகத்தில் ஜியோவால் மிஞ்ச முடியவில்லை. சீனாவில் 3.38 மில்லியன் 5ஜி சைட்கள் உள்ளன. அதே நேரம் இந்தியாவில் இப்போது தான் 4 லட்சம் 5ஜி சைட்டுகள் உள்ளன. மெட்டா, கூகுகள், சில்வர் லேக், கேகேஆர், குவால்காம் ஆகிய நிறுவனங்கள் 2020-ல் ஜியோவில் முதலீடு செய்த நிலையில் அவர்களை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துவிட்டு, பொதுமக்களிடம் இருந்தே பணம் பெறும் முயற்சியில் இறங்கியுள்ளது ஜியோ நிறுவனம். எனினும் எந்த ஒரு அதிகாரபூர்வ அறிவிப்பையும் அந்நிறுவனம் இதுவரை வெளியிடவில்லை.