ரிலையன்ஸிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..
ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் பண கையிருப்பு 25 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்ந்திருக்கிறது. இந்திய மதிப்பில் இதன் அளவு என்பது 2லட்சத்து 10 ஆயிரம் கோடி ரூபாயாகும்.
இத்தனை பெரிய வலுவான பண கையிருப்பு உள்ளதால் இந்நிறுவனத்துக்கு புதிய முதலீடுகளும் புதிய வணிக வாய்ப்புகளும் அதிகரித்துள்ளன. கடந்த டிசம்பருடன் முடிந்த காலகட்டத்தை விட 16 ஆயிரம் கோடி ரூபாய் கூடுதல் வருவாய் ரிலையன்ஸ்க்கு கிடைத்திருக்கிறது. இந்தியாவில் 2 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு பணம் வைத்திருக்கும் நிறுவனங்கள் வெறும் 8 விழுக்காடு மட்டுமே உள்ளன. குறிப்பிட்ட காலகட்டத்தில் 1லட்சத்து 32 ஆயிரம் கோடி ரூபாயை 5ஜி சேவையை கட்டமைப்புக்கு ஜியோ உருவாக்கியது. இது மட்டுமின்றி புதிய ஆற்றல் துறை சார்ந்த வணிகத்திலும் ரிலையன்ஸ் குழுமம் முதலீடு செய்திருக்கிறது. அந்த நிறுவனத்தின் நிகர கடன் என்பது 13.9 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளன. இந்தியாவின் பெரிய நிறுவனமாக திகழும் ரிலையன்ஸ் குழுமம், 9 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு வருவாய் இருந்ததாகவும், ரிலையன்ஸ் நிறுவனத்தின் நிகர லாபம் மட்டும் 79 ஆயிரத்து 020 கோடி ரூபாயாக உள்ளது. இது 7.3விழுக்காடு அதிகமாகும். கடந்த வெள்ளிக்கிழமை ரிலையன்ஸ் நிறுவன பங்குகள் 2.2%உயர்ந்தது குறிப்பிடத்தக்கது