முகேஷ் அம்பானியின் முரட்டு ஸ்டார் டீல் !!!
கிரிக்கெட் போட்டிகளை இலவசமாக ஒளிபரப்பி கொள்ளை லாபம் பார்த்த ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி, பொழுதுபோக்குத்துறையில் புரட்சியை ஏற்படுத்தினார். இந்நிலையில் தொலைக்காட்சி மற்றும் ஸ்ட்ரீமிங் துறையில் சிறந்து விளங்கும் ஸ்டார் நிறுவனத்திடம் முகேஷ் அம்பானி டீல் பேசி வருகிறார். 51%பங்குகளை வாங்க அம்பானி முரட்டு டீல் பேசி வருகிறார். சோனி நிறுவனமும் ஜீ என்டர்டெயின்மென்ட் நிறுவனமும் ஏற்கனவே ஒப்பந்தம் செய்திருந்தாலும், ஆனால் அவர்களுக்குள் வரும் 21 ஆம் தேதி இறுதி கெடு உள்ளது. அதற்குள் ஜி நிறுவனமும் சோனியும் இணைவார்களா என்பது சந்தேகம்தான். அதே நேரம் அம்பானியின் டீல் நிச்சயம் முடியும் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். டிஜிட்டல் விளம்பரங்களைவிட டிவியில் விளம்பரங்கள் 6 மடங்கு விலை உயர்ந்ததாக உள்ளது. வியாகாம் 18 மற்றும் டிஸ்னி இணைந்தால் இந்தி மொழியில் உள்ள பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளும், தமிழில் உள்ள பொழுதுபோக்கு சந்தையும் அம்பானி வசம் வந்துவிடும். கிரிக்கெட்டின் மீது தீராத காதல் கொண்டுள்ள இந்தியாவில் ஐபிஎல் போட்டிகளை 5 ஆண்டுகளுக்கு ஒளிபரப்பும் டிஜிட்டல் உரிமம் முகேஷ் அம்பானி பெற்றுள்ளார். இப்போது டிஸ்னியும் அம்பானி வசம் செல்ல இருக்கிறது.
ஊடகம்,விளையாட்டு ஆகியவற்றின் மூலமாக, அம்பானி எந்த பொருட்களையும் பொதுமக்களிடம் எளிதாக கொண்டு சேர்த்துவிடமுடியும் நிலை ஏற்பட்டுள்ளது. ஜீ நிறுவனமும் சோனியும் இணையும் பட்சத்தில் 2021ஆம் ஆண்டு இருதரப்பு ஏற்படுத்திக்கொண்ட ஒப்பந்தம் புதுப்பிக்கப்படும். ஆனால் டீல் முடியுமா என்பதே கேள்வியாக உள்ளது. இதனால் அம்பானியுடன் போட்டி போட யாரும் இருக்க மாட்டார்கள் என்பதே சூழலாக உள்ளது.