டெஸ்லாவுக்கு பலதுறை அமைச்சகம் வரவேற்பு அளிக்கத் திட்டம்?
அமெரிக்காவில் மட்டுமின்றி, டெஸ்லா என்ற மின்சார கார்களை அறிமுகப்படுத்தி மிரளவைத்தவர் பெரும்பணக்காரரான எலான் மஸ்க். இவர் இந்திய மின்சார கார்கள் சந்தையில் கால்பதிக்க பல ஆண்டுகளாக கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். ஆனால் அவரால் அது முடியாமல் தடை பட்டுக்கொண்டே வந்தது. இந்த நிலையில் அண்மையில் அமெரிக்கா சென்ற பிரதமர் மோடியை மஸ்க் நேரில் சந்தித்து தனது விருப்பத்தை தெரிவித்தார். மேலும் அண்மையில் டெஸ்லா நிறுவன தலைமை அதிகாரிகளும் இந்தியாவுக்கும் வந்தனர். இந்த நிலையில் இந்தியாவிற்குள் டெஸ்லா நிறுவனம் தனது முதல் கார்களை ஜனவரி 2024-ல் அறிமுகப்படுத்த ஆயத்தப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்கம்,கனரக தொழிற்சாலைகள்,மின்சாதம் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துர அமைச்சகம் ஆகியவை இணைந்து டெஸ்லாவை வரவேற்க காத்திருக்கின்றன. அடுத்தாண்டு குடியரசுத் தினவிழாவில் பைடன் பங்கேற்கவும் அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்தியாவிலேயே பேட்டரி மற்றும் கார் உற்பத்தி செய்யவேண்டும் என்கிற கருத்துக்கு டெஸ்லா இசைவு தெரிவித்துவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. டெஸ்லா ஆலை அமைக்க விரும்பினால், அதில் பிரச்னைகள் வரும்பட்சத்தில் அதனை தீர்க்க மத்திய அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தற்போது வரை 60விழுக்காடு இறக்குமதி வரி விரைவில் 40விழுக்காடு வரை குறைக்க இசைவும் கிடைத்திருப்பதாக விவரம் அறிந்தவர்கள் தெரிவித்தனர்.இதற்காக மாற்றப்படும் கட்டமைப்புகள், டெஸ்லாவுக்கு மட்டுமின்றி, இந்தியாவில் மின்சார வாகன உற்பத்தி செய்ய விரும்பும் அனைவருக்கும் கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 40ஆயிரம் டாலருக்கு அதிகமாக உள்ள இந்த வகை கார்களுக்கு 100விழுக்காடு வரி விதிக்கும் திட்டமும் மத்திய அரசிடம் இருக்கிறதாம். இந்தியாவிலேயே மின்சாரவாகனங்கள் உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு உற்பத்தி சார்ந்த ஊக்கத் தொகை அளிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவிற்கு அதிகளவில் வர வாய்ப்பும் ஏற்பட்டுள்ளது.