சர்க்யூட் லிமிட்டை உயர்த்திய மும்பை பங்குச்சந்தை..
இந்தியாவின் முன்னணி பங்குச்சந்தைகளில் ஒன்றாக மும்பை பங்குச்சந்தை உள்ளது. இது அண்மையில் ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் என்ற நிறுவனத்தின் பங்குகளை அறிமுகப்படுத்தியது. இந்த பங்குகளின் சர்க்கியூட் லிமிட் 5 விழுக்காடாக இருந்தது. இது தற்போது 20%ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த புதிய அறிவிப்பு செப்டம்பர் 4ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. குறிப்பிட்ட இந்த பங்குகள் அடுத்தவாரம் பங்குச்சந்தையில் இருந்து வெளியேற வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.ரயில்டெல்,இந்தியா பெஸ்டிசைட்ஸ் உள்ளிட்ட 9 நிறுவனங்களின் சர்கியூட் லிமிட் 10விழுக்காடாக உயர்த்தப்பட்டுள்ளன. சர்கியூட் லிமிட் எனஅறால் என்ன என்று நீங்கள் கேட்கலாம். குறிப்பிட்ட இந்த தொகை வரை மட்டுமே ஒரு நாளில் இந்த பங்குகள் ஏற்ற இறக்கம் செய்ய இயலும்.முதலில் இந்த அளவு ஆகஸ்ட் 24 ஆம் தேதி வரை மட்டுமே இருந்தது. பின்னர் அது 29ஆம் தேதி வரை தள்ளி வைக்கப்பட்டது. அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த நிறுவனம் விரைவில் கடன் தருவது, மற்றும் காப்பீட்டுத்துறைகளிலும் கால்பதிக்க இருக்கிறது.