மஸ்குக்கு அடிச்சது யோகம்..
இத்தாலியின் பிரபல நிறுவனமாக இன்டெஸா சான்பாலோ திகழ்கிறது.அந்த நிறுவனம் எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ்புளோரேஷன் டெக்னாலஜி நிறுவனத்தில் பெருந்தொகையை முதலீடு செய்திருக்கிறது. உலகளவில் விண்வெளித்துறை பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று இத்தாலிய நிறுவனம் கணித்துள்ளது. 2022-25 காலகட்டத்தில் புதிய கண்டுபிடிப்புகளை தங்கள் நிறுவனம் அதிகம் நம்புவதாக கூறியுள்ள இன்டெசா, எலான் மஸ்கின் நிறுவனத்தில் முதலீடு செய்திருக்கிறது.அதிநவீன ராக்கெட்டுகள்,விண்வெளி சாதனங்களையும், ராணுவத்துக்கு தேவையான தளவாடங்களையும் வழங்கி வருகிறது.
எப்போதும் சர்ச்சைக்கு பேர் போன எலான் மஸ்க், ரஷ்யா-உக்ரைன் போரின்போது கிரைமியா பகுதியில் எச்சரிக்கைகளை மீறி தனது ஸ்டார்லிங் செயற்கைக்கோள்களையும்,இணைய வசதியையும் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.இத்தாலிய நிறுவனம் மஸ்கின் நிறுவனத்தில் எவ்வளவு முதலீடு செய்துள்ளது என்ற எந்த தரவுகளையும் அந்நிறுவனம் வெளியிடவில்லை.