சீனாவுக்காக குரல் கொடுக்கும் மஸ்க்…
உலகின் பல நாடுகளிலும் செயற்கை நுண்ணறிவு நுட்பம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.இந்த நுட்பத்துக்காக பல முன்னணி நிறுவனங்களும் பல கோடி ரூபாய் முதலீடுகளை செய்து வருகிறது. நிலைமை இப்படி இருக்கையில் அண்மையில் பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க் சீனாவுக்கு சென்று வந்தார். அவர் இந்த செயற்கை நுண்ணறிவு நுட்பம் பற்றி தனது கருத்தை டிவிட்டர் ஸ்பேசஸ் நிகழ்ச்சியில் பேசியுள்ளார். அதில் மனிதகுலத்தின் வளர்ச்சிக்காக செயற்கை நுண்ணறிவு நுட்பம் வளர்ந்து வருகிறது என்றார். ஆனால் சரயாக பயன்படுத்த வேண்டும் என்று குறிப்பிட்ட மஸ்க், டிஜிட்டல் சூப்பர் இன்டலிஜன்ஸ் நுட்பம் அந்நாட்டுக்கு பாதகமாக மாறக்கூடிய வாப்புகள் இருப்பதாகவும் மஸ்க், சீன அதிகாரிகளை எச்சரித்தாக கூறப்படுகிறது.
செயற்கை நுண்ணறிவு நுட்பத்தை பயன்படுத்தி உய்குர் எனப்படும் உள்ளூர் பூர்வகுடி மக்கள் மீது தாக்குதல் நடத்த வாய்ப்பு இருப்பதாகவும் மஸ்க் தெரிவித்துள்ளார். அமெரிக்கா – சீனா இடையே நிலைமை சீரடையும் என்று நம்புவதாக கூறியுள்ள மஸ்க், தைவான் விவகாரத்தில் அமெரிக்கா- சீனா இடையே முன்னேற்றம் ஏற்படும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சர்வதேச சமூகத்தினர் மனிதகுல வளர்ச்சிக்கு பங்களிப்பு அளி்க்க செயற்கை நுண்ணறிவு நுட்பம் பயன்படுத்தும்பட்சத்தில் சீனாவும் அதற்கு ஆதரவு தெரிவிக்க வாய்ப்புள்ளதாகவும் மஸ்க் தெரிவித்துள்ளார்.