250 ரூபாய்க்கு மியூச்சுவல் பண்ட்!!!
இந்தியர்கள் மியூச்சுவல் ஃபண்ட் எனப்படும் பரஸ்பர நிதியில் சேமிக்க அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் செபி நிறுவனத்தின் தலைமை பதவியில் இருக்கும் மதாபி புரி பூச், புதுப்புது மாற்றங்களை செபியில் செய்து வருகிறார். இவர் அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார்., அப்போது பேசிய மதாபி, மாதந்தோறும் 250 ரூபாய் சிப் எனப்படும் மாதாந்திர முதலீட்டு திட்டத்தை சாத்தியப்படுத்த முடிவெடுத்துள்ளதாக கூறியுள்ளார். மாதந்தோறும் 250 ரூபாய் என்ற முதலீடு மூலம் முதலீடுகள் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மாதாமாதம் ஒரு சிறிய தொகையை தொடர்ச்சியாக முதலீடு செய்யும் பட்சத்தில் அது ஒரு கட்டத்தில் சிறுதுளி பெருவெள்ளமாக மாறும் என்பதை பல சிப் கதைகள் உதாரணங்களாக உள்ளன. 50 டிரில்லியன் என்ற மைல்கல்லை எட்ட இருக்கும் சூழலில் மதாபியின் இந்த யோசனை கவனம் பெற்றுள்ளது.
இந்தியாவில் பரஸ்பர நிதி எனப்படும் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களின் மதிப்பு தற்போது வரை 49.04 டிரில்லியன் டாலராக நவம்பர் மாதத்தில் இருக்கிறது. கடந்த சில மாதங்ளாக பங்குச்சந்தைகள் அழகாய் உயர்ந்து புதுப்புது உச்சங்களை தொட்டுள்ளன. மியூச்சுவல் ஃபண்ட்களில் மாதந்தோறும் குறைந்தபட்சம் 100 ரூபாயில் இருந்து பொதுமக்கள் தங்கள் முதலீடுகளை செய்ய இயலும். ஆனால் அது மிகக்குறைவான அளவே வாய்ப்புகள் உள்ளன. குறைவான சிப் மூலம் இந்திய பங்குச்சந்தைகள்,ஈக்விட்டி சந்தைகள் ஸ்திரத்தன்மையை கொண்டுள்ளன. உள்நாட்டு முதலீடுகள் அதிகரிப்பதால் வெளிநாட்டில் முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை அதிகரிக்கும். தற்போது 500 ரூபாய் என்ற அளவில்தான் மக்கள் அதிகம் சிப் எனப்படும் சீரான முதலீடு செய்து வருகின்றனர். விரைவில் இதனை 250 ரூபாயாக அமல்படுத்த ஆர்வம் காட்டி வருவதாகவும் மதாபி கூறியுள்ளார். .