மகன் கல்யாணத்து போகணும், லீவ் குடுங்க!!!
ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் நிர்வாகி சந்தா கொச்சார் தனியார் நிறுவனத்துக்கு முறைகேடாக பணம் அளித்ததாக எழுந்த புகார் குறித்து சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. இந்த சூழலில் சந்தா-தீபக் கொச்சார் தம்பதிக்கு இருக்கும் ஒரே மகனுக்கு வரும் 15ம் தேதி திருமணம் நடைபெற இருக்கிறது. இந்த சூழலில் மகனின் திருமணத்துக்காக வழக்கு விசாரணை தொடர்பாக 15 நாட்கள் அவகாசம் கோரி சந்தா தரப்பு மும்பை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இதனை விசாரித்த நீதிபதிகள் சிபிஐ தரப்பு பதில்தர வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. பண மோசடி வழக்கில் சிக்கியுள்ள தம்பதியை கடந்த டிசம்பர் மாதம் 23-ம் தேதி சிபிஐ விசாரணை நடத்திவருகின்றனர். இந்த நிலையில் தங்கள் ஒரே மகன் திருமணத்துக்காக 15 நாட்கள் விசாரணையில் ஆஜராவதில் இருந்து விலக்கு வேண்டும் என்று கொச்சார் தரப்பு கோரியுள்ளது. இந்நிலையில், கொச்சார் தம்பதிக்கு விலக்கு கிடைக்குமா என்பது குறித்து வெள்ளிக்கிழமை முடிவை க்கூற இருக்கிறது.