Air India தலைவர் என்.சந்திரசேகரன்.. Tata குழுமம் அறிவிப்பு..!!
Tata Sons நிறுவனத்தின் தலைவர் என்.சந்திரசேகரன் ஏர் இந்தியாவின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டு உள்ளார்.
Air Indiaவை வாங்கிய Tata Sons:
ஏர் இந்தியா நிறுவனத்துக்கு ஏற்பட்ட இழப்பை சரி செய்வதற்காக, மத்திய அரசு அதனை தனியாருக்கு ஏலம் விட்டது. அதன்படி, ஏர் இந்தியாவை டாடா குழுமம் 18 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் வாங்கியது. மொத்தப் பணத்தில் 2 ஆயிரத்து 700 கோடியை ரொக்கப் பணமாக கொடுத்த டாடா குழுமம், மீதமுள்ள 15 ஆயிரத்து 300 கோடிக்கு ஏர் இந்தியாவின் கடன்களை ஏற்று கொள்ளவும் டாடா குழுமம் ஒத்து கொண்டுள்ளது. அதனை தொடர்ந்து ஜனவரி 27-ம் தேதியன்று ஏர் இந்தியா நிறுவனம் டாடா குழுமத்திடம் அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கப்பட்டது.
Ilker Ayci நியமனம்:
இந்நிலையில், கடந்த பிப்ரவரி 14-ம் தேதி நடைபெற்றTata Sons நிறுவனத்தின் கூட்டத்தில் ஏர் இந்தியா நிறுவனத்தின் புதிய தலைமை செயல் அதிகாரியாகவும், நிர்வாக இயக்குநராகவும் Ilker Ayci-யை நியமித்துள்ளதாக Tata Sons நிறுவனத் தலைவர் சந்திரசேகரன் தெரிவித்தார். இல்கர் அய்சி, இதற்கு முன்பாக துருக்கி விமான நிறுவனத்தில் தலைமைப் பொறுப்பில் இருந்த அனுபவம் உள்ளதாகவும், அதனால் அவர் ஏர் இந்தியாவை திறம்பட நடத்துவார் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் சந்திரசேகரன் குறிப்பிட்டார்.
இல்கர் அய்சிக்கு எதிர்ப்பு:
பாகிஸ்தானின் நட்பு நாடான துருக்கியின் அதிபர் ரிசெப் தையிப் எர்டோகனுக்கு நெருக்கமானவராக அய்சி என்றும், தேசிய பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு ஏர் இந்தியாவின் தலைமைச் செயல் அதிகாரி (CEO) மற்றும் நிர்வாக இயக்குநர் (MD) அய்சியின் நியமனத்துக்கு அரசாங்கம் அனுமதி வழங்கக் கூடாது எனவும் பல்வேறு தரப்பிலிருந்தும் கோரிக்கை எழுந்தது.
இல்கர் அய்சி அறிவிப்பு:
இதையடுத்து, எனது குடும்பத்தின் மகிழ்ச்சி மற்றும் நல்வாழ்வுக்கு முன்னுரிமை அளித்து, பதவியை ஏற்றுக் கொள்வது சாத்தியமான அல்லது கெளரவமான முடிவாக இருக்காது என்ற முடிவுக்கு வந்துள்ளதாகவும், ஏர் இந்தியா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பதவி தனக்கு வேண்டாம் எனவும் இல்கர் அய்சி மார்ச் 2-ம் தேதி அறிவித்திருந்தார்.
Tata குழுமம் ஒப்புதல்:
இந்நிலையில், டாடா சன்ஸ் நிறுவனத் தலைவர் என்.சந்திரசேகரனை ஏர் இந்தியாவின் புதிய தலைவராக அறிவித்துள்ள டாடா குழுமம் அதற்கான ஒப்புதலையும் வழங்கியுள்ளது. Tata Sons நிறுவனத்தின் தலைவர் என்.சந்திரசேகரன் டாடா ஹோல்டிங் உட்பட 100-க்கும் மேற்பட்ட டாடா குழும நிறுவனங்களை வழி நடத்தி வருகிறார். 2016-ம் ஆண்டு டாடா சன்ஸ் நிறுவனத்தில் சேர்ந்த சந்திரசேகரன், 2017-ம் ஆண்டு அதன் தலைவராக பொறுப்பேற்றார். மேலும், டாடா மோட்டார்ஸ், டாடா பவர், டாடா ஸ்டீல்ஸ் மற்றும் டாடா கன்சல்டன்சி உள்ளிட்ட பல்வேறு டாடா குழும நிறுவனங்களுடைய வாரிய தலைவராகவும் பொறுப்பு வகித்து வரும் என்.சந்திரசேகரன் தற்போது ஏர் இந்தியாவுக்கு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.