நாராயண மூர்த்தியின் எளிமை…
கொல்கத்தாவில் டெக்னோ இந்தியா பல்கலைக்கழக விழாவுக்கு இன்போசிஸ் நிறுவனத்தின் நிறுவனரான நாராயண மூர்த்தி சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார்.அப்போது அவர் வருகைக்காக பிரத்யேக கார்களோ,சூட் ரூம்களோ ஏற்பாடு செய்யப்படவில்லை. இதுகுறித்து விழா ஏற்பாட்டாளர்களில் ஒருவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். அதில் மிக சகஜமாக ஜாம்பவானான நாராயண மூர்த்தி பழகியதாக கூறினார். மாணவர்களைத்தானே சந்திக்கப்போகிறேன் எனக்கு எதற்கு ஆடம்பரம் என்ற தொனியில் அவர் பேசியதாக பல்கலைக்கழக நிர்வாகி பதிவிட்டுள்ளார். விமான நிலையத்தில் இருந்து பல்கலைக்கழகத்துக்கு செல்ல அதிகநேரம் எடுத்துக்கொண்டதால் மாணவர்களிடம் அதிகநேரம் பேச முடியவில்லையே என்று நாராயண மூர்த்தி வருத்தப்பட்டதாகவும் விழா ஏற்பாட்டாளர் தெரிவித்தார்.எளிமையான வெஜ் சாப்பாடும், அட்டகாசமான பிரெஞ்சு மொழி ஆதிக்கமும் நாராயணமூர்த்தியிடம் இருந்ததாகவும் ராய் சவுத்ரி என்ற அந்த நிர்வாகி தெரிவித்துள்ளார்.அரசியல், ஜனநாயகம், கம்யூனிசம் உள்ளிட்டவறையும் நாராயணமூர்த்தி பேசியுள்ளார். இந்த நிகழ்ச்சியில் பிரபல கிரிக்கெட் வீரர் கங்குலி,ரத்தன் டாடா,நடிகை சுஷ்மிதா சென் உள்ளிட்டோருக்கும் 4,200 மாணவர்களுக்கும் பட்டங்கள் வழங்கப்பட்டன. இதில் நட்சத்திரங்களுக்கு கவுரவ டாக்டர் பட்டங்கள் வழங்கப்பட்டன. கங்குலி,ரத்தன் டாடா உள்ளிட்டோர் நேரில் வரமுடியவில்லை என்றாலும் காணொலி வாயிலாக தங்கள் மகிழ்ச்சிகளையும் அன்புகளையும் தெரிவித்துக்கொண்டனர்.