தேசிய பென்ஷன் திட்டத்தை வெல்லப் போவது டாயிச் வங்கியா?
இந்தியாவின் மிகப்பெரிய பென்ஷன் திட்டத்தை நிர்வாகம் செய்வதற்கும், பாதுகாவலராக இருப்பதற்கும் டாயிச் வங்கி முன்வந்துள்ளது, வருடத்திற்கு 100 ரூபாய் மட்டும் போதும் என்று தனது விருப்ப மனுவில் அந்த வங்கி குறிப்பிட்டுள்ளது. ஜெர்மனியை தலைமையிடமாகக் கொண்ட டாய்ச் வங்கி, கிட்டத்தட்ட 150 வருடங்கள் பாரம்பரியமிக்கது.
இந்தியாவில் பல்வேறு நிதி திட்டங்களில் ஈடுபட்டு வரும் இந்த வங்கி பல முன்னணி வங்கி மற்றும் நிதி நிறுவனங்களுடன் போட்டி போட்டு தேசிய ஓய்வூதியத் திட்டத்தை வெல்லும் முனைப்புடன் உள்ளது. சுமார் 6 லட்சம் கோடி ரூபாய் அளவிலான முதலீடுகள் பல்வேறு திட்டத்தின் கீழ் உள்ளது. தற்போது பென்ஷன் திட்டத்திற்கு ஸ்டாக் ஹோல்டிங் கார்ப்பரேஷன் ஆஃ இந்தியா நிறுவனம் பாதுகாவலராக உள்ளது, அத்துடன் பொதுத் துறை நிறுவனங்கள் பலவற்றுக்கு டெபாசிட்டரியாகவும் இருக்கிறது.
ஆனால் NPS திட்டத்தை நிர்வாகம் செய்யவும், பாதுகாவலராக இருக்கவும் வருடத்திற்கு சுமார் 19 கோடி ரூபாய் தொகையை ஸ்டாக் ஹோல்டிங் கார்ப்பரேஷன் கட்டணமாக கோரியுள்ளது. புதிய திட்டத்தில் முதலீடு செய்வதற்கு முன்பு இரண்டு அல்லது மூன்று நாட்கள் இந்த தொகை பாதுகாவலர் கையில் தான் இருக்கும். அதன் காரணமாக NPS திட்டத்தை பெறுவதற்காக பல வங்கிகள் மற்றும் முன்னணி நிதி நிறுவனங்கள் போட்டி போட்டு வருகின்றன.
தற்போது என்பிஎஸ் திட்டத்திற்கு பாதுகாவலராக இருக்க CITY வாங்கி, SBI மற்றும் ICICI வங்கி ஆகியவை விருப்ப விண்ணப்பத்தினை அளித்துள்ளன. இதற்கு வருட கட்டணமாக வங்கிகள், ஒரு கோடி ரூபாய் தொகையை சமர்ப்பித்துள்ள நிலையில் டாய்ச் வங்கி ஒரு வருடத்திற்கு கட்டணமாக 100 ரூபாய் அறிவித்துள்ளது.
இதில் இருக்கும் பிரச்சனை என்னவெனில் சமீபத்தில் அஞ்சலக காப்பீடு திட்டத்தில் அதன் சொத்துக்களுக்கு பாதுகாவலராக இருக்க ஒரு பன்னாட்டு வங்கி முயற்சி செய்தது, அதைப்போலவே LIC க்கு பாதுகாவலராக இருக்க ஒரு பன்னாட்டு வங்கி முயற்சி செய்தது, ஆனால் வெளிநாட்டு வங்கிகளுக்கு தடை விதித்த மத்திய அரசு, இப்போது என்பிஎஸ் திட்டத்திற்கு டாய்ச் வங்கியை நியமிக்குமா என்பது மில்லியன் டாலர் கேள்வி !
காலம் பதில் சொல்லட்டும்.