IRDAவிடம் பேச்சுவார்த்தை..

இந்தியாவில் மருத்துவ காப்பீடு உள்ள மக்கள் 24 மணி நேரத்துக்கும் குறைவாக மருத்துவமனையில் பெறும் சேவைகளுக்கு தற்போது வரை கட்டணம் செலுத்தும் நிலை இருக்கிறது. இந்த சூழலில் தேசிய நுகர்பொருள் ஆணையத் தலைவர் அண்மையில் இது குறித்து IRDAIக்கு கோரிக்கையை முன்வைத்தார். சில மணி நேரத்தில் முடித்துவிடும் சில மருத்துவ சேவைகள் ஏன் காப்பீடுகளில் கவர் ஆவதில்லை என்று நீதிதபதி பரசாப் சாஹி நிகழ்ச்சி ஒன்றில் கேட்டார். இது குறித்து பதில் அளித்துள்ள நுகர்வோர் விவகாரங்கள் துறை செயலர் ரோஹித் குமார் சிங், வாடிக்கையாளர் நலன் கருதி விரைவில் இந்த விதி குறித்து பரிசீலிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். சில மணி நேரத்தில் மருத்துவ சிகிச்சைகள் முடிந்து வீட்டுக்கு செல்லலாம் என்ற அளவுக்கு மருத்துவத்துறை வளர்ந்துவிட்டாலும், சில பழைய விதிகளால் பாதிப்பு ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது.
சில விதிகள் மிகக்கடுமையாக இருப்பதாகவும் நீதிபதி சாஹி குறிப்பிட்டு பேசினார். மேலும் சில ஆணைகளை செயல்படுத்துவதில் நடைமுறை சிக்கல்கள் நிலவுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.நுகர்வோரின் உரிமைகள் மற்றும் அவர்களின் நீதிக்காக சில ஆணைகளை உடனடியாக செயல்படுத்தவேண்டும் என்றும் நீதிபதி கேட்டுக்கொண்டார்.
நீதிபதி பேச்சை அடுத்து காப்பீட்டு நிறுவனத்தில் உள்ள பிரச்னைகள் என்ன என்பது குறித்து மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக கூறப்பட்டுள்ளது பிரச்னைக்கு ஒரு தீர்வு காண வழிவகை செய்யப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.