“நெட்ஃபிளிக்ஸ்” அதிரடி விலை குறைப்பு ! முழு விவரம் !
அமெரிக்க OTT ஸ்ட்ரீமிங் தளமான நெட்ஃபிளிக்ஸ் புதிய வாடிக்கையாளர்களை ஈர்க்கும் விதமாக இந்தியாவிற்கான புதிய விலைத் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி மொபைல் போன் திட்டத்தில் 199 ரூபாயாக இருந்த கட்டணத்தை 149 ரூபாயாக குறைந்துள்ளது. எந்தவொரு சாதனத்திலும் அனைத்து உள்ளடக்கத்தையம் பார்க்க அனுமதிக்கும் திட்டம் 199 ரூபாய் மற்றும் 499 ரூபாயாகவும் கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது. நான்கு சாதனங்களில் வேலை செய்யும் பிரீமியம் திட்டமானது ₹649 இருக்கிறது. இது மலிவானது. இந்த கட்டண விகிதங்கள் செவ்வாய்க்கிழமை முதல் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
“புதிய விலைத் திட்டங்கள் மக்களுக்கு மிகச்சிறந்த உள்ளடக்கத்தை வழங்குவதற்கான எங்கள் செயல்திட்டங்களுக்கு ஏற்ப உள்ளன” என்று நெட்பிளிக்ஸ் இந்தியாவின் துணைத் தலைவர் மோனிகா ஷெர்கில் தெரிவித்தார். ஏற்கனவே டப்பிங் மற்றும் சப்டைட்டிலிங்கில் முதலீடு செய்து வரும் அதே வேளையில், திரைப்படங்கள் மற்றும் தொடர்கள் ஆகிய இரண்டும் மக்களை இலக்காகக் கொண்டு செயல்படும் என்றும் ஷெர்கில் கூறினார்.
நெட்பிளிக்ஸ் கிட்டத்தட்ட ஐந்து மாதங்களுக்குப் பிறகு டிஸ்னி + ஹாட் ஸ்டாருடன் இணைந்து புதிய விலைத் திட்டங்களை வெளியிட்டது, இதில் மொபைல் மட்டும் வருடத்திற்கு ₹499, இரண்டு சாதனங்களில் வருடத்திற்கு ₹899 மற்றும் நான்கு சாதனங்களில் வருடத்திற்கு ₹1,499. ஹாட்ஸ்டார் அதன் விஐபி சேவைக்கு ஆண்டுக்கு ₹399 ஆகவும், பிரீமியத்திற்கு ₹1,499 ஆகவும் இருந்தது. மாதத்திற்கு ₹199 மொபைல் சந்தாவை நெட்பிளிக்ஸ் அறிமுகப்படுத்தியது, மேலும் அமேசான் ப்ரைம் வீடியோ மெம்பர்ஷிப்பை ஏர்டெல் ப்ரீ-பெய்டு வாடிக்கையாளர்கள் மாதம் ₹89 செலுத்துவதன் மூலம் பெறலாம்.