ஜூலை 13-இல் இருந்து சென்செக்ஸில் புதிய ஏற்பாடு..
இந்தியாவின் மிகமுக்கிய இரண்டு நிறுவனங்களான hdfc,hdfc bank ஆகியவற்றின் இணைப்பு ஒரு வழியாக முடிந்தது. இந்த நிலையில் மும்பை பங்குச்சந்தையின் இன்டக்சில் இடம்பிடிக்கும் அடுத்த நிறுவனமாக ஜே எஸ்டபிள்யு ஸ்டீல்ஸ் இடம்பிடிக்க இருக்கிறது. இந்த புதிய மாற்றம் வரும் 13 ஆம் தேதியில் இருந்து அமலாகிறது.இது தொடர்பாக ஜூலை 5ஆம் தேதி ஒரு முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டது., S&P BSE 500 பிரிவில் எச்டிஎப்சிக்கு பதிலாக ஜேபிஎம் ஆட்டோமொபைல்ஸ் நிறுவனமும்,S&P BSE 100-ல் சொமேட்டோ நிறுவனமும் மாற்றப்பட இருக்கிறது. மும்பை பங்குந்சந்தையில் ஜூலை 5ஆம் தேதி நிலவரப்படி ஒரு பங்கின் விலை 792 ரூபாயாக இருக்கிறது. தேசிய பங்குச்சந்தை நிப்டி 50 இன்டக்சிலும் LTI mindtree, நிறுவனம் எச்டிஎப்சிக்கு பதிலாக வரும் 13ஆம் தேதியில் இருந்து இடம்பிடிக்க இருக்கிறது. மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் எச்டிஎப்சி மற்றும் எச்டிஎப்சி வங்கி ஆகியன கடந்தாண்டு ஏப்ரல் 4ஆம் தேதி இணைய இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டு, கடந்த 1ஆம் தேதி இணைப்பு முடிந்துவிட்டது. எச்டிஎப்சி வங்கியின் கடன் தரவுகளின்படி கடந்த மார்ச் 31ஆம் தேதி வரை 16 லட்சம் கோடியாக இருந்த கடன் அளவு,இணைப்புக்கு பிறகு 22.21லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
இந்த இணைப்பின் மூலம் எச்டிஎப்சியில் வாங்கிய கடனை, இனி எச்டிஎப்சி வங்கியில் செலுத்திக்கொள்ள இயலும், கடன் வரம்பு மாறாமல் செலுத்தும் முறை மட்டுமே மாற்றப்பட இருக்கிறது.