அமலுக்கு வந்தது புதிய சுங்கக் கட்டணம்..
நாடு முழுவதும் இன்று ஜூன் 3 ஆம் தேதி முதல் பல சுங்கச்சாவடிகளில் 5 விழுக்காடு வரை கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது. ஆண்டுதோறும் கட்டணங்களை உயர்த்தி வரும் நெடுஞ்சாலைத்துறை , ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் கட்டணங்களை உயர்த்த திட்டமிட்டன. ஆனால் தேர்தல் நேரம் என்பதால் அது அமலாக வில்லை. அதற்கு மாறாக தற்போது உயர்த்தப்பட்ட சுங்கக் கட்டணம் அமலுக்கு வந்திருக்கிறது. புதிய கட்டணம் ஜூன் 3 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இந்தியாவில் ஒட்டுமொத்த விலை விலைவாசி உயர்வு குறியீடான சிபிஐ அடிப்படையில் ஆண்டுதோறும் சுங்கக் கட்டணம் உயர்த்துவதை மத்திய அரசு வாடிக்கையாக கொண்டுள்ளது. நாடு முழுவதும் 855 சுங்கச்சாவடி மையங்களில் தேசிய நெடுஞ்சாலைத்துறை கட்டணம் 2008 விதியின்படி பணம் வசூலிக்கப்படுகிறது. இவற்றில் 675 சுங்கச்சாவடிகள் பொதுமக்களே நிதி திரட்டி உருவாக்கியவை, மீதமுள்ள 180 சுங்கச்சாவடிகள் உரிமம் பெற்றவர்களால் இயக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.