பாஸ்ட்டேகில் புதிய வசதி..
அண்மையில் ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கை கூட்டம் நடந்து முடிந்தது. இது தொடர்பான செய்தியாளர் சந்திப்பில் அந்த வங்கியின் ஆளுநர் சக்தி காந்ததாஸ் புதுப்புது அறிவிப்புகளை வெளியிட்டார். இதன் ஒரு பகுதியாக ரிசர்வ் வங்கி ஒரு புதிய நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி வாகனங்களில் உள்ள பாஸ்டேகுக்கு ஒவ்வொரு முறையும் ரீசார்ஜ் செய்வது எளிமையாக்கப்பட்டுள்ளது. வாரத்துக்கு ஒரு முறையோ, மாதமோ அல்லது தினசரி பேமண்ட் பாஸ்டேகுக்கு வரும்படி புதிய அம்சம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், தேவைப்படும்போது இந்த வசதியை பயன்படுத்திக்கொள்ள முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை இன்னும் எளிமையாக சொல்ல வேண்டுமெனில், குறிப்பிட்ட தொகைக்கு கீழ் சென்றால் அக்கவுண்டில் இருந்து பாஸ்டேகுக்கு பணம் எடுத்துக்கொள்ளலாம் என்று வாடிக்கையாளரே அதனை தேர்வு செய்ய முடியும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு முறை சரிபார்ப்பு மூலம் இந்த வசதியை செய்ய முடியும் என்றும் ரிசர்வ்வங்கி குறிப்பிட்டுள்ளது.
ஈ-மேண்டேட் என்பது, வங்கிகள் குறிப்பிட்ட தேதிக்குள் பணத்தை கட்டவேண்டும் என்று நிர்பந்திக்கும் நிலையில் அப்போது பணத்தை எடுத்துக்கொள்ளுங்கள் என்று இயல்பாகவே வாடிக்கையாளர் அனுமதிக்கும் முறையே ஈ மேண்டேட் ஆகும். பணம் எடுக்கப்படும் 24 மணி நேரத்துக்கு முன்பே வாடிக்கையாளர்களின் வங்கிக்கணக்கில் பணம் எடுப்பது தொடர்பாக குறுஞ்செய்தியும்,அதற்கு உண்டான ஓடிபி எண்ணும் வரும் என்பது குறிப்பிடத்தக்கது.