யுபிஐயில் வருகிறது புதிய வசதி!!!!
உலகளவில் பல புதிய கண்டுபிடிப்புகள் வந்தாலும் அண்மை காலத்தில் இந்தியாவில் ஹிட் அடித்த பணப்பரிமாற்ற நுட்பம் என்றால் அது நிச்சயம் UPIதான், இந்த பணம் செலுத்தும் முறையில் செயற்கை நுண்ணறிவு நுட்பத்தையும் ரிசர்வ் வங்கி இணைத்துள்ளது. எளிமையாக சொல்ல வேண்டுமானால், இனி பணம் செலுத்த வேண்டுமானால் செயற்கை நுண்ணறிவு கணினியுடன் கலந்துரையாடுவது போலவே பணப்பரிவர்த்தனை நடைபெற இருக்கிறது. இதற்கான பணிகளை NPCI செய்திருக்கிறது.இந்த புதிய வசதி பட்டன் செல்போன்கள் மற்றும் ஸ்மார்ட் போன்களில் இயங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக இந்தி மற்றும் ஆங்கிலத்தில் இது அமலாக இருக்கிறது.விரைவில் இந்த வசதி பிற இந்திய மொழிகளுக்கும் விரிவுபடுத்தப்படுகிறது. யுபிஐ லைட் வசதியில் தற்போதுள்ள பணப்பரிமாற்ற வசதியை 200 ரூபாயில் இருந்து 500ரூபாயாக உயர்த்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. கிராமபுறங்களில் டிஜிட்டல் கட்டமைப்பை வலுவாக்க இந்த திட்டம் உதவும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.இணைய வசதி இல்லாத ஊர்களில் பிராந்திய மொழிகளில் பணம் செலுத்துவது மிகப்பெரிய மாற்றமாக இருக்கும் என்கிறார்கள் நிபுணர்கள்.சாட் ஜிபிடியில் சாட் செய்வது போல இனி பணத்தை அனுப்பவோ,பெறவோ முடியும் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள் யுபிஐ போலவே NFC வகை பணப்பரிவர்த்தனைகளும் விரைவில் வேகமெடுக்கும் என்பதே நிபுணர்களின் நம்பிக்கையாக இருக்கிறது.