ஏர் இந்தியாவில் புதுசு..ஸ்டைலா..
அரசு வசம் இருந்த விமான நிறுவனமான ஏர் இந்தியா மீண்டும் டாடா குழுமத்தின் வசமே சென்றிருக்கும் சூழலில் புதிய அப்டேட் கிடைத்திருக்கிறது. கடந்த 60 ஆண்டுகளாக ஏர் இந்தியா நிறுவன பணிப்பெண்கள் புடவை மட்டுமே அணிந்து வந்தனர். இந்த சூழலில் வரும் நவம்பர் முதல் ஏர் இந்தியாவின் பணிப்பெண்களுக்கு புதிய ஆடை தயாராகி வருகிறதாம். சீருடை பாணியில் இந்த புதிய சீருடை இருக்கப்போகிறதாம். பெண்களுக்கு சுரிதாரும், ஆண் விமான பயண பணி ஆண்களுக்கு கோட் சூட் தரப்பட இருக்கிறது. பல வண்ணங்கள் , பல வகையிலான உடைகள் இதற்காக பரிசீலிக்கப்பட்டுள்ளதாகவும், புதிய ஆடைகளை பிரபல ஆடை வடிவமைப்பாளர் மனீஷ் மல்ஹோத்ரா தயாரித்ததாகவும் கூறப்படுகிறது. ஏர் இந்தியாவின் லோகோ நிறத்திலேயே சிவப்பு தங்கம் மற்றும் aubergineநிறத்தில் புதிய உடைகள் இருக்கும் என்று கூறப்படுகிறது.
விஸ்தாரா நிறுவனமும் கூட்டணி வைத்துள்ளதால் ஏர் இந்தியாவை போலவே சீருடைகளை மாற்றுவதாக தகவல் வெளியாகியுள்ளது.கடைசியாக 1962ஆம் ஆண்டு ஸ்கர்ட்,ஜாக்கெட்களை மாற்றி ஜெ.ஆர்.டி டாடா உத்தரவிட்டார். இந்த நிலையில் தற்போது உடைகள் மாறப்போகின்றன.எனினும் இது குறித்து ஏர் இந்தியா எந்த ஒரு அதிகாரபூர்வ தகவலையும் வெளியிடவில்லை.