தாமதமாகி வரும் புதிய தொழிலாளர் சட்டங்கள்
ஒரு ஊழியரின் கடைசி வேலை நாளிலிருந்து இரண்டு நாட்களுக்குள் ஊதியத்தின் முழு மற்றும் இறுதி தீர்வை வழங்க வேண்டும் என்று புதிய தொழிலாளர் சட்டங்கள், குறிப்பாக ஊதியக் குறியீட்டு விதிகள் குறிப்பிடுகிறது. இதுஜூலை 1 முதல் நடைமுறைக்கு வர வேண்டும், ஆனால் தாமதமாகி வருகிறது.
ஊதியம் உட்பட பல திருத்தங்களுடன், முந்தைய 29 சட்டங்களை நான்கு தொழிலாளர் குறியீடுகளாக இணைத்துள்ளது. தற்போது, நிறுவனங்களுக்கு 15 முதல் 60 நாட்கள் வரையிலும், சில சூழ்நிலைகளில் 90 நாட்கள் வரையிலும், ஊதியத்தின் முழு தீர்வையும் செலுத்த வேண்டும்.
இந்தப் புதிய விதிமுறைகள் நடைமுறைக்கு வருவதற்கு, அனைத்து மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் இந்தச் சட்டங்களைத் தயாரித்து அறிவிக்க வேண்டும், இது இன்னும் செய்யப்படவில்லை.