அதானி குழுமத்துக்கு புதிய சிக்கல்!!!
நார்வேவின் பெரிய ஓய்வூதிய நிதி நிறுவனமான கே எல்பி, தனது முதலீட்டை அதானி குழுமத்தில் முதலீடாக செய்துள்ளது. பெரிய தொகையை அதானியின் ஆற்றல் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ள நிலையில் அந்த தொகையை விதிகளை மீறி ஆஸ்திரேலியாவில் அதானியின் நிறுவனத்தில் பயன்படுத்தியதாக புகார் எழுந்துள்ளது. அதானி கிரீன் என்ற பங்கின் விலை 70 % இதுவரை சரிந்துள்ளன. ஆஸ்திரேலியாவில் கார் மைக்கேல் நிறுவனத்தில் நிதியை முதலீடு செய்துள்ள அதானி குழுமம், சுற்றுச்சூழலை மாசுபடுத்துவதாகவும் புகார் எழுந்துள்ளது. கேஎல்பி நிறுவனம் நிலக்கரி மூலம் ஆற்றல் எடுப்பதை தவிர்த்தாலும், அதானி குழுமத்தில் முதலீடு செய்துள்ளனர். ஆனால் அதானி குழுமம் ஆஸ்திரேலியாவில் நடத்தும் கார்மைக்கேல் நிறுவனம் நிலக்கரியில் இருந்து ஆற்றல் எடுப்பதால் முதலீட்டாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். அதானி குழுமத்தின் செயல்பாடுகளால் கேஎல்பி அதிருப்தியில் இருப்பதாகவும்,இது வருங்காலத்தில் அதானி குழும பங்குகள் விலை சரிய வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. ஏற்கனவே ஹிண்டன்பர்க் அறிக்கையால் பாதி முதலீட்டாளர்கள் வெளியேறிவிட்டதால், கேஎல்பி விவகாரம் விஸ்வரூபம் எடுக்கும் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர்.