ஃபுளோட்டிங் ரேட் குறித்து புதிய நடைமுறை..
வாடிக்கையாளர் என்று ஒருவர் இருந்தால்தானே வணிகம் செய்ய முடியும் என்பதில் ரிசர்வ் வங்கி எப்போதும் தெளிவாக இருக்கிறது. இதன் ஒரு பகுதியாக வாடிக்கையாளர்களை சிக்கல்களில் இருந்து தவிர்க்கும் நோக்கில் புதிய விதிகளை ரிசர்வ் வங்கி வகுத்து வருகிறது. குறிப்பாக வீட்டுக்கடன் வாங்குவதில் வெளிப்படைத்தன்மை வேண்டும் என்பதில் ரிசர்வ் வங்கி தெளிவாக இருக்கிறது.எத்தனை ஆண்டுகள் வீட்டுக்கடன் வாங்க வேண்டும், எத்தனை மாதங்களில் திருப்பி செலுத்த முடியும் என்ற தெளிவான அட்டவணையை தயாரிப்பதில் ரிசர்வ் வங்கி துரிதமாக செயல்பட்டு வருகிறது. தேவையில்லாமல் வீட்டுக்கடன்களை அதிக நாட்களுக்கு இழுக்கடிக்க கூடாது என்பதற்காக புதிய வரைமுறை வகுக்கப்பட்டுள்ளது.
அதாவது வட்டி விகிதத்தில் ஏதேனும் மாற்றங்கள் இருந்தால் கடன் வாங்கியவர்களுக்கு கடன் கொடுத்த வங்கிகள் தெரிவிக்க வேண்டும் என்று மத்திய ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. வாடிக்கையாளர் எத்தனை மாதங்கள் இந்த கடன்களை கட்ட முடியும் என்பது குறித்து வாடிக்கையாளர்களிடம் ஒப்புதல் வாங்க வேண்டும் என்றும் புதிய வரைவு விதியை ரிசர்வ் வங்கி வகுத்துள்ளது.
வீட்டுக்கடன்களில் நிலையான நிரந்தரமான வீட்டுக்கடன் என்பது எப்போதும் மாறுபடாது, ஆனால் ஃபுளோட்டிங் ரேட் என்பது புதிய அறிவிப்புகளுக்கு ஏற்றபடி மாறிக்கொண்டே இருக்கும். இந்த புளோட்டிங் ரேட் உயர்ந்தால் வீட்டுக் கடன்களுக்கான emi அதிகரிக்கும், குறையும்பட்சத்தில் பணம் செலுத்தும் காலம் குறைந்துவிடும், புதிய வசதி வாடிக்கையாளர்களுக்கு நிச்சயம் பலனுள்ளதாக அமையும் என்பதே நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது. வாடிக்கையாளர்களில் பலர் புதிய நடைமுறையின்படி ஃபுளோட்டிங் ரேட்டுக்கு மாறவே அதிக வாய்ப்பு உள்ளது. ஏனெனில் 2024 பிற்பகுதியில் வீட்டுக்கடன்கள் மீதான வட்டி குறைய வாய்ப்பிருப்பதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். ரிசர்வ் வங்கியின் தரவுகளின்படி ரெபோ விகிதம் 6.5% ஆக உயர்ந்துள்ளது. இது கடந்த 2022மே மாதத்தில் 4%ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.