புதிய திட்டம்….வட்டி தருகிறது ஆப்பிள் நிறுவனம்!!!
புதுமைகளுக்கு பெயர் பெற்ற ஆப்பிள் நிறுவனம் அடுத்ததாக தனது ஆப்பிள் கார்டு சேமிப்பு கணக்கை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கு ஆண்டு வட்டியாக 4.15 விழுக்காடு வருடாந்திர தொகையும் அளிக்கப்பட இருக்கிறது.
இந்த திட்டத்தில் இவ்வளவுதான் குறைந்தபட்ச பேலன்ஸ் இருக்கவேண்டும் என்று எந்த கட்டுப்பாடும் இல்லை.ஆப்பிள்கார்டு திட்டத்தில் பொருட்கள் வாங்குவதால் கிடைக்கும் ரிவார்டு புள்ளிகள் நேரடியாக இந்த கணக்கில் சேமிக்கப்படும். இந்த புதிய கணக்கை ஆப்பிளுடன் இணைந்து கோல்ட்மேன் சாச்ஸ் நிறுவனமும் செய்ய இருக்கிறது. பிரதான வங்கிகளில் குறைந்தபட்ச பேலன்ஸ் 5 ஆயிரம் டாலர் இருக்க வேண்டும் என்ற விதி உள்ள நிலையில் இந்த ஆப்பிள் கணக்குக்கு எந்த குறைந்தபட்ச தொகையும் தேவைப்படாது. இந்த திட்டத்துக்கு வாடிக்கையாளர்கள் நல்ல கருத்துகளை தந்து வருகின்றனர். அண்மையில்தான் ஆப்பிள் நிறுவனம் ஆப்பிள் பே லேட்டர் என்ற திட்டத்தை தொடங்கி வைத்து. இதன் மூலம் அதிக கட்டணம் இல்லாமல் 4 தவணைகளாக பணத்தை கட்டும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டது. இது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்த சூழலில் புதிய வங்கி சேவையை ஆப்பிள் நிறுவனம் தொடங்கியிருப்பது ஆப்பிள் செல்போன் பயன்படுத்துவோர் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. ஆப்பிள் நிறுவன பொருட்கள் இந்தியாவில் 25 ஆண்டுகளாக இருந்து வந்தாலும் முதல் முறையாக மும்பை மற்றும் டெல்லியில் ஆப்பிள் நேரடி விற்பனை மையம் ஏப்ரல் 18ம் தேதி திறக்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் ஆப்பிள் நிறுவன தலைமை செயல் அதிகாரி டிம்குக் உள்ளிட்டோர் பங்கேற்று வாடிக்கையாளர்களை வரவேற்றனர்.