வெளியாகி இருக்கும் கிக்கான புதிய விதி !!!
ஹரியானாவில் புதிய கலால் கொள்கை அறிமுகமாகியுள்ளது. இது என்ன கொள்கை என்றால் மது வை எங்கெல்லாம் விற்கலாம், எங்கெல்லாம் அனுமதிக்கலாம் என்று அரசு தீர்மானிக்கும். ஹரியானாவில் அப்படித்தான் ஒரு கொள்கை அண்மையில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அதாவது 5 ஆயிரம் அல்லது அதற்கு மேல் பணியாளர்களை கொண்ட நிறுவனம் எனில் அங்கு பீர் அல்லது.ஒயின் வகை மதுபாட்டில்கள் விற்பனை செய்ய அந்த மாநில அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த புதிய விதி அந்த மாநிலத்தில் ஜூன் 12 , 2024 ஜூன் 11 வரை அமலாக இருக்கிறது. எப்படியெல்லாம் மதுபான வசதி இருக்க வேண்டும் என்பதையும் அந்த மாநில அரசு அறிவித்துள்ளது. தரைதளத்தில் டைல்ஸ்,அல்லது மர வேலைப்பாடுகள் இருக்க வேண்டும் என்றும்,சூப்பர் மார்க்கெட்களில் இருப்பதைப்போலவே வாடிக்கையாளர்களே நேரடியாக சென்று மதுவகைகளை தேர்வு செய்யும் வசதியும் இருக்கவேண்டும் என்று புதிய கலால் கொள்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. போதுமான அளவுக்கு தீயணைப்பு மற்றும் பாதுகாப்பு வசதிகள் செய்யவேண்டும் என்றும் ,கேன்டீன்கள் வைப்பது போல இனி மதுக்கடைகளில் பீர் அல்லது ஒயின் மட்டும் விற்கலாம் என்றும் அதற்காக 10 லட்சம் ரூபாய் டெபாசிட் தொகை செலுத்த வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. நம்மூரில் அண்மையில் அறிவித்து,பின்னர் ரத்து செய்ததைப்போல பொது நிகழ்ச்சிகளில் மது வழங்க ஒரு நாளைக்கு 5 ஆயிரம் ரூபாய் முதல் 50 ஆயிரம் ரூபாய் வரை லைசன்ஸ் கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரைலிட்டர் பீர் 110 ரூபாய்க்கு மேல் விற்கக்கூடாது என்றும் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.