ஆன்லைன் விளையாட்டில் புதிய விதிகள்!!!
இந்தியாவில் 50 கோடி பேர் ஏதோ ஒரு வகையில் செல்போன்களில் கேம்களை விளையாடுகின்றனர் என்கிறது ஒரு புள்ளி விவரம். நிலைமை இப்படி இருக்க ஆன்லைன் விளையாட்டுகளில் பந்தயம் கட்டி விளையாடுவதை தடுக்க மத்திய அரசு புதிய விதிகளை வகுத்து வருகிறது. இதுபற்றி மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை இணை அமைச்சர் ராஜிவ் சந்திரசேகர் பேட்டியளித்துள்ளார். அதில் ஆன்லைன் விளையாட்டுகள் மட்டுமே அனுமதிக்கப்படுவதாகவும்,அதனை வைத்து சூதாட்டம் நடத்த அனுமதி கிடையாது என்றும் தெரிவித்துள்ளனர். இதற்கென பிரத்யேக விதிகளை தங்கள் துறை அமைத்துள்ளதாகவும் இணையமைச்சர் தெரிவித்துள்ளார்.இந்த விதிகளின்படி, ஆன்லைன் விளையாட்டை நிர்வகிக்கும் நிறுவனங்கள் பதிவு செய்வது கட்டாயம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய விதிகள் வகுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர்,புதிய விதிகள் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில் இது பற்றி கருத்துகள் தெரிவிக்க விரும்புவோர் ஜனவரி 17ம் தேதி தெரிவிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார். இந்த புதிய விதிகளின்படி ஆன்லைன் கேம் விளையாடும் அனைவரும் இந்தியாவில் தாங்கள் வசிக்கும் முகவரியை பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சமூக வலைதளங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள அதே சட்டம் இதற்கும் பொருந்தும் என்றும்.மத்திய இணையமைச்சர் தெரிவித்துள்ளார். விளையாட்டுகளில் முடிவுகளை வைத்து சூதாட்டம் முற்றிலும் தவிர்க்கப்பட்டுள்ளதாகவும் இணையமைச்சர் தெரிவித்துள்ளார். விளையாட்டுத்துறையில் அளவுக்கு அதிகமான முதலீடுகள் குவிவதாக தெரிவித்துள்ள இணையமைச்சர் ,ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் அதிக முதலீடுகளை ஈர்ப்பதாகவும் தெரிவித்தார்.சாதாரண வீடியோகேமாக இருந்தாலும் அதனை பதிவு செய்துகொள்வது அவசியம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.