நிதிச் சந்தை திறப்பு நேரம் மாற்றம்.. நேரத்த மாத்துனா நிலவரம் மாறுமா..!?
இந்திய ரிசர்வ் வங்கி முந்தைய வர்த்தக நேரங்களை மாற்றியமைத்துள்ளது.
ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் உள்ள சந்தைகளில் வழக்கமாக காலை 9 மணிக்கு வர்த்தகம் தொடங்கும். தற்போது சந்தைகள் காலை 10 மணிக்கு திறக்கப்படுகிறது.
புதிய அட்டவணைப்படி, அழைப்பு, அறிவிப்பு, காலப் பணம் காலை 9:00 முதல் மாலை 3:30 வரையிலும் , அரசு பத்திரங்களில் சந்தை ரெப்போ – காலை 9:00 முதல் மதியம் 2:30 வரையிலும், அரசுப் பத்திரங்களில் ட்ரை பார்ட்டி ரெப்போ – காலை 9:00 முதல் மாலை 3:00 மணி வரையிலும், வணிகத் தாள் மற்றும் வைப்புச் சான்றிதழ்கள் – காலை 9:00 முதல் மாலை 3:30 வரையிலும், கார்ப்பரேட் பத்திரங்களில் ரெப்போ – காலை 9:00 முதல் மாலை 3:30 வரையிலும் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.
மேலும் அரசு பத்திரங்கள் (மத்திய அரசு பத்திரங்கள், மாநில வளர்ச்சி கடன்கள் மற்றும் கருவூல பில்கள்) – காலை 9:00 முதல் மாலை 3:30 வரை அந்நியச் செலாவணி (FCY)/இந்திய ரூபாய் (INR) வர்த்தகம் அந்நிய செலாவணி டெரிவேடிவ்கள் உட்பட – காலை 9:00 முதல் மாலை 3:30 வரை. ரூபாய் வட்டி விகித வழித்தோன்றல்கள் – காலை 9:00 முதல் மாலை 3:30 வரை என்று வங்கியின் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.