வரிசைகட்டும் ஐபிஓகள்..
ஆரம்ப பங்கு வெளியிடுவதில் உலகளவில் இரண்டாவது பெரிய நாடாக இந்தியா இருக்கிறது. அண்மையில் நாடாளுமன்றத் தேர்தலும் நடந்து முடிந்துவிட்டதால் எந்த தடையும் இல்லாமல் நிறுவனங்கள் தங்கள் ஆரம்ப பங்கு வெளியீட்டை அறிவித்து வருகின்றன. வரும் வாரத்தில் லே டிவானானுஸ் டெக்னாலஜி என்ற நிறுவனம் மட்டுமே பங்குச்சந்தையில் ஆரம்ப பங்கு வெளியீட்டை செய்ய இருக்கிறது. இந்த நிறுவனம்தான் IXIgo என்ற சுற்றுலா பிளாட்ஃபார்ம்களை நடத்தி வருகிறது. கிரோநாக்ஸ் லேப்ஸ் என்ற நிறுவனமும் ஆரம்ப பங்கு வெளியீட்டுக்கு இறுதி கட்டத்தில் இருக்கிறது. ஜூன் 10 ஆம் தேதி இந்த பங்கு அறிமுகமாக இருக்கிறது. Ixigo நிறுவன பொது வெளியீடு, 740 கோடி ரூபாய் முதலீட்டை ஈர்க்க நடைபெறுகிறது.10 ஆம் தேதி தொடங்கி வரும் 12 ஆம் தேதி இந்த பங்குச்சந்தையின் ஆரம்ப பங்கு வெளியீடு நிறைவடைகிறது. ஏற்கனவே இந்த நிறுவனம் 333 கோடி ரூபாயை முதலீட்டாளர்களிடம் இருந்து பெற்றுள்ளது. நோமுரா,மார்கன் ஸ்டான்லி, 3பி இந்தியா ஈக்விட்டி ஃபண்ட், HDFCமியூச்சுவல் ஃபண்ட் உள்ளிட்ட பெரிய நிறுவனங்களும் முதலீடுகளை செய்துள்ளன. 6.66 கோடி பங்குகளை வெளியிட்டு அதன் மூலம் 120 கோடி ரூபாய் நிதி திரட்டவும் முடிவெடுக்கப்பட உள்ளது. ஒரு பங்கின் விலை 88 ரூபாய் முதல் 93 ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு லாட்டில் 161 பங்குகள் இருக்கும். 75 விழுக்காடு அளவு பங்குகள் ஏற்கனவே ஏலம் எடுக்கப்பட்டுள்ளன. 15 விழுக்காடு அளவுக்கு முதலீட்டாளர்களுக்கும், மீதம் 10 % பங்குகள் மட்டுமே சில்லறை முதலீட்டாளர்களுக்கு அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. Ixigo நிறுவனத்தின்செயலி மூலம் இந்தியர்கள் விமானம், பேருந்து மறறும் ஹோட்டல் டிக்கெட்டுகளை எளிமையாக பெற்றுக்கொள்ள இயலும்.