ரகுராம் ராஜனுக்கு அப்புறம் சக்திகாந்ததாஸ் தான் !!!
சென்ட்ரல் பேங்கிங் என்ற சர்வதேச பொருளாதார ஆய்வறிக்கை கட்டுரை அண்மையில் சிறந்த மத்திய வங்கிகளின் ஆளுநர் யார் என்பதை ஆராய்ந்து ஒரு பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் இந்திய ரிசர்வ் வங்கியின் தற்போதைய ஆளுநராக உள்ள சக்திகாந்ததாஸ் தான் மிகச்சிறந்த ஆளுநர் என்று அதில் புகழப்பட்டுள்ளது. மிகவும் சவாலான காலகட்டங்களில் குறிப்பாக கொரோனா,ரஷ்யா உக்ரைன் போர் மற்றும் நிதி நிறுவனங்களின் சரிவின் போது சரியான முடிவுகளை சக்திகாந்ததாஸ் எடுத்ததார் என்று அந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆக்கபூர்வமான பணப்பரிவர்த்தனை முறைகள் இவர் ஆளுநராக இருக்கும் போது தான் முன்னெடுக்கப்பட்டதாக புகழ்ந்துள்ளனர். வெளிநாட்டு பணம் கையிருப்பை முறைப்படுத்தியது.கொரோனா காலகட்டத்தில் தேவையான நிதியை துறைகளுக்கு செலுத்த உதவியது உள்ளிட்ட அம்சங்கள் சக்தி காந்ததாஸின் தனித்துவம் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. செண்ட்ரல் பேங்கிங் என்ற விருதை பெறும் 2வது நபர் என்ற பெருமையை சக்தி காந்ததாஸ் பெறுகிறார். கடந்த 2015ம் ஆண்டு அப்போதைய ரிசர்வ் வங்கி ஆளுநராக இருந்த ரகுராம் ராஜன் இந்த அங்கீகாரத்தை முதலில் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்க ஒரு அம்சமாகும். மிகச்சிறந்த தேசிய வங்கியாக உக்ரைன் தேசிய வங்கி தேர்வு செய்யப்பட்டுள்ளது