53 டாலர் விலை குறைஞ்சிருக்கு!!!! 50 பைசாவாவது குறைச்சீங்களா?
இந்தாண்டில் முதன்முறையாக சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை மிகக்குறைவாக 76 டாலர்களாக சரிந்துள்ளது. இதே கச்சா எண்ணெய் ஒரு பேரல் கடந்த மார்ச் மாதம் 129 டாலராக இருந்தது. கச்சா எண்ணெய் விலை ஏற்கனவே கணிசமாக குறைந்ததுள்ளது.இதற்கு என்ன காரணங்கள் என்று ஆராய வேண்டியுள்ளது. சர்வதேச அளவில் பொருளாதாரம் சரிந்துள்ளது.உலகளவில் ஆட்குறைப்பு அச்சமும் ஏற்பட்டுள்ளது. பல்வேறு நாடுகளும் தங்கள் வரி விதிப்பு முறையை மாற்றி அமைத்துள்ளதும் கச்சா எண்ணெய் விலை சரிவுக்கு காரணமாக உள்ளது. சீனாவில் உள்ள கொரோனா சூழல்,கொரோனா கட்டுப்பாடுகள் நீக்கம் உள்ளிட்ட காரணிகள் கச்சா எண்ணெய் விலையை கடுமையாக குறைத்துள்ளது.
ரஷ்ய கச்சா எண்ணெய் உற்பத்தி, போருக்கு முந்தைய நிலையில் உள்ளதும் கச்சா எண்ணெய் விலை சரிய காரணமாக உள்ளது. ஒரு பேரல் கச்சா எண்ணெய் 60 டாலர் என விலை நிர்ணயித்துள்ளபோதும், ரஷ்ய கச்சா எண்ணெய் ஏற்றுமதி குறைவாகவே உள்ளது கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளதால் விலைவாசி உயர்வு குறைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது
இந்த காரணிகளால் ரூபாயின் மதிப்பு வலுவடைய இருக்கிறது. ரிசர்வ் வங்கி மீதான அழுத்தம் குறைய இருக்கிறது.எனவே வருங்காலங்களில் ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களை உயர்த்த வேண்டிய அவசியம் குறையும்.