அடுத்தாண்டு ஆபத்து காத்திருக்காம்…
அமெரிக்க பெடரல் ரிசர்வ், இங்கிலாந்து வங்கி ஆகிய நிறுவனங்கள் தங்கள் வட்டி விகிதங்களை உயர்த்தாமல் அப்படியே தொடர்ந்து வந்தாலும் பின்னாலேயே பெரிய பிரச்னையுடன் உள்ளன.இந்தாண்டு மட்டுமின்றிவரும் ஆண்டிலும் கடன்கள் மீதான வட்டி விகிதத்தை உயர்த்தவே அதிக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.கொரோனாவுக்கு முன்பிருந்த நிலை தற்போது இல்லை என்றும் குறைவான பணியாளர்களை வைத்து அதிக வேலை வாங்கும் சூழல் உலகம் முழுவதும் இருப்பதாகவும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். கொரோனாவுக்கு பிந்தய தற்போதைய நிலை,மகி இயல்பாக மாறிவிட்டது என்றும் அவர்கள் எச்சரிக்கின்றனர்.அமெரிக்காவைத் தொடர்ந்து பிரிட்டனிலும் இதே நிலை தொடர்ந்து வருகிறது. அமெரிக்கா,பிரிட்டன் மட்டுமின்றி ஸ்விட்சர்லாந்து வங்கியும் கடன்களுக்கான வட்டியை உயர்த்தியுள்ளது. துருக்கி,ஸ்வீடன்,நார்வேயும் இதேநிலையில் தொடர்கிறது. தென்னாப்ரிக்கா,தைவான்,ஹாங்காங்,எகிப்து மற்றும் பிலிப்பைன்சிலும் கடன்களுக்கான வட்டி விகிதங்களை நிறுத்தி வைத்துள்ளன. உலகளவில் எல்நினோ விளைவுகள் காரணமாக உலகளவில் பல பிரச்னைகளும் வருகின்றன.எண்ணெய்விலைகளும் கடுமையாக உயர்ந்து வருவது மிகப்பெரிய சிக்கல்களை செய்து வருகிறது. இந்த காரணிகளால் பல நாடுகளின் பொருளாதார நிலை தலைகீழாகும் வாய்ப்பும் இருப்பதாக கூறப்படுகிறது.