சிரிச்சபடி அலட்சியப்படுத்திய நிர்மலாசீதாராமன்..
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் பங்குச்சந்தை இடைத்தரகர் ஒருவர் எழுப்பிய கேள்வி நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நிதியமைச்சரிடம் குறிப்பிட்ட தரகர் கேள்வி ஒன்றை எழுப்பினார். அதில் ஏற்கனவே பங்குச்சந்தை தரகர்களுக்கு அடுக்கடுக்காக பல வரிகள் விதிக்கப்படுவதாகவும், குறிப்பாக எஸ்டிடி, ஜிஎஸ்டி, ஐஜிஎஸ்டி மற்றும் நீண்டநாள் ஆதாய வரி உள்ளிட்ட வரிகள் போடப்படுவதாகவும், லாபத்தின் ஒரு பங்கை மத்திய அரசு எடுத்துக் கொள்வதாகவும் அவர் சரமாரியாக விளாசினார். எந்த வேலையும் செய்யாமல் லாபத்தில் மட்டும் பங்கு எடுத்துக்கொள்வதால் மத்திய அரசை ஸ்லீப்பிங் பார்ட்னர் என்றும் அவர் விமர்சித்தார். பங்குச்சந்தை இடைத்தரகரைவிட மத்திய அரசு அதிகம் சம்பாதிப்பதாக தெரிவித்த அவர், எல்லா ரிஸ்குகளையும் தரகர் மட்டும் எடுத்துக்கொள்ளும் நிலையில் அரசாங்கம் லாபம் மட்டும் எடுத்துக்கொள்வதாக கூறியுள்ளார். இதற்கு ஏதேனும் வழிமுறை இருக்கிறதா என்றும் கேட்டார்.
மும்பை மாதிரியான நகரங்களில் 11 விழுக்காடு கூடுதல் வட்டியாக செலுத்தவேண்டியிருப்பதாகவும், ரியல் எஸ்டேட் துறையில் மீண்டும் எதற்கு ஒரு ஜிஎஸ்டி என்றும் சரமாரியாக கேள்விகளை அடுக்கினார். இத்தனை கேள்விகளையும் எதிர்கொண்ட நிதியமைச்சர் நேரடியாக பதில் ஏதும் சொல்லாமல் சிரித்தபடியே நேரத்தை கடத்தினார். மேலும் தன்னிடம் பதில் இல்லை என்றும், ஸ்லீப்பிங் பார்ட்னர் இங்கு அமர்ந்து பதில் சொல்லத் தேவையில்லை என்றும் அலட்சியமாக பதில் அளித்தார். பொறுப்புள்ள ஒறு நிதியமைச்சரிடம் நியாயமான கேள்வியை முன்வைத்தபோது அலட்சியமாக பதில் அளித்த நிதியமைச்சரின் வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.