பங்குச்சந்தைகளில் பெரிய மாற்றமில்லை…
இந்திய பங்குச்சந்தைகளில் ஆகஸ்ட் 30ஆம் தேதி பெரிய மாற்றம் இல்லாமல் வர்த்தகம் நிறைவுற்றது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 11 புள்ளிகள் உயர்ந்து 65,087 புள்ளிகளாகவும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டிவெறும் 4 புள்ளிகளும் உயர்ந்து 19,347 புள்ளிகளுக்கும் வர்த்தகத்தை நிறைவு செய்தன. தொடக்கத்தில் அட்டகாசமாக தொடங்கிய சந்தைகள் போகப்போக சரிந்தன. பின்னர் கடைசி நேரத்தில் லாபத்தை பதிவு செய்ய முதலீட்டாளர்கள் பங்குகளை விற்றதால் சிக்கல் நேரிட்டது.Tata Steel, Infosys,Maruti Suzuki, M&M, Eicher Motors உள்ளிட்ட நிறுவன பங்குகள் தேசிய பங்குச்சந்தையில் ஏற்றம் கண்டன.Power Grid Corporation, SBI, BPCL, Dr Reddy’s Laboratories,Hero MotoCorp உள்ளிட்ட நிறுவன பங்குகள் சரிந்தன. ரியல் எஸ்டேட் துறை பங்குகள் மட்டும் 1 விழுக்காடு ஏற்றம் கண்டன. ஆட்டோமொபைல், தகவல் தொழில்நுட்பம், உலோகம் உள்ளிட்ட துறைகள் அரை விழுக்காடு ஏற்றம் கண்டன. ஆற்றல்துறை, எண்ணெய் மற்றும் வங்கித்துறை பங்குகள் அரை விழுக்காடு சரிந்தன. Escorts Kubota, Bharat Heavy Electricals, Axis Bank, Varroc Engineering, Skipper, Minda Corporation, Hatsun Agro Product, PTC India, Patel Engineering, NBCC, Welspun Corp, JSW Energy, Bharat Forge, Indiabulls Housing Finance ஆகிய நிறுவனங்கள் மும்பை பங்குச்சந்தையில் 52 வாரங்களில் இல்லாத உச்சம் தொட்டன. தங்கம் மற்றும் வெள்ளி விலையிலும் ஏற்றம் நிலவியது. ஒரு கிராம் தங்கம் 30 ரூபாய் உயர்ந்து 5530 ரூபாயாகவும், ஒரு சவரன் தங்கம் 240 ரூபாய் உயர்ந்து 44,240 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு 50 காசுகள் உயர்ந்து 80 ரூபாய் 70 காசுகளாகவும், கட்டி வெள்ளி விலை கிலோவுக்கு 500 ரூபாய் அதிகரித்து 80 ஆயிரத்து 700 ரூபாயாகவும் இருக்கிறது.கடந்த 2 நாட்களில் மட்டும் சவரனுக்கு 400 ரூபாய் தங்கம் விலை உயர்ந்திருக்கிறது. இந்த விலைகளுடன் 3% ஜிஎஸ்டி, செய்கூலி,சேதாரம் ஆகியவற்றையும் சேர்த்தால்தான் நாம் பாக்கெட்டில் இருந்து எவ்வளவு பணம் நகைக்கடைக்கு தரவேண்டும் என்பது தெரியவரும். ஆனால் செய்கூலி,சேதாரம் கடைக்கு கடை மாறுபடும்.