எரிபொருள் இல்லை..300 ஃபிளைட் கேன்சல்..
பாகிஸ்தானில் எரிபொருள் தட்டுப்பாடு மிகஉச்சகட்டத்தை எட்டியுள்ளது. இதனால் பாகிஸ்தான் சர்வதேச விமானமான பிஐஏ தனது 300 விமானங்களை 10 நாட்களாக இயக்காமல் நிறுத்தியுள்ளது. பல மாதங்களாக இந்த விமானங்களுக்கு போட்ட பெட்ரோலுக்கு பணம் தரப்படாததால் பாகிஸ்தான் ஸ்டேட் ஆயில் நிறுவனம்,எரிபொருள் தர மறுத்துள்ளது. கடன் சுமையால் அந்நாட்டில் கடும்பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அக்டோபர் 14ஆம் தேதி முதல் 322 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதில் 51 விமானங்கள் உள்நாட்டு விமானங்களாகும்.பயணிகள் சிரமத்தை தவிர்க்கும் வகையில் மாற்று விமானங்களில் அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர். திவால் சூழலை தவிர்க்கும் நோக்கில் சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து இன்னும் ஒரு கடன் திட்டத்தை பெற பாகிஸ்தான் முயற்சித்து வருகிறது. இடைக்கால அரசு , பாகிஸ்தான் விமானங்களை விற்கவும் திட்டமிட்டுள்ளது. மொத்த சொத்துமதிப்பை விட PIAவிமான நிறுவனத்தின் கடன் 5 மடங்காக உயர்ந்திருக்கிறது. 1955ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட PIAநிறுவனம் 1990ஆம் ஆண்டுவரை லாபகரமாக இயங்கி வந்தது. தனியாரின் வருகையால் இந்த நிறுவனம் பெரிய சரிவை சந்தித்தது.2020-ல் பாகிஸ்தானின் கராச்சியில் ஒரு விமானம் விழுந்து வெடித்ததில் 97 பயணிகள் உயிரிழந்தனர்.