நோ நெவர்… அது நடக்காது!!!
இன்போசிஸ் நிறுவனத்தின் நிறுவனரான நாராயண மூர்த்தி,அண்மையில் சாட் ஜிபிடி பற்றி தனது கருத்தை முன்வைத்துள்ளார். செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி,உருவாக்கப்பட்டுள்ள புதிய சாட்ஜிபிடி உண்மையில் நன்றாக உள்ளதாகவும் இதனால் கோட் எழுதுவோருக்கு வேலை போய்விடுமா என்றால் இல்லவே இல்லை என்கிறார் நாராயணமூர்த்தி., புதிய நுட்பங்கள் கோட் எழுதுவோர் பயன்படுத்திக்கொண்டு அதில் தங்கள் திறமைகளை காட்ட வேண்டும் என்று கூறியுள்ளார். 1977-78களில் program generatorகள் இருந்த போதும் புதிதாக வருவோருக்கு வேலை போய்விடும் என்று அச்சம் இருந்ததாக கூறியுள்ள நாராயண மூர்த்தி, மனித மூளை எப்படிவேண்டுமானாலும் வளையும் தன்மை கொண்டது என்றும், 78களில் நிலவிய அச்சம் நடக்கவே இல்லை என்றும் சுட்டிக்காட்டிய அவர், கடந்த சில மாதங்களாக சாட்ஜிபிடியை பயன்படுத்தி வருவதாக கூறியுள்ள நாராயண மூர்த்தி,செயற்கை நுண்ணறிவால் வேலை போகுமா என்றால் அதற்கு வாய்ப்பு இல்லை என்றும், சாட் ஜிபிடியை கற்றுக்கொண்டு அதில் கோட் எழுதுவோர் தங்கள் திறமையை வெளிப்படுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார்.