10 ரூபா காயின் மாதிரி அதானி பத்திரத்தை எவனும் வாங்க மாட்றானே…
பிரிட்டனைச் சேர்ந்த வங்கியான ஸ்டாண்டர்ட் சார்ட்டட், புதிய முடிவு ஒன்றை எடுத்துள்ளது அதில் அதானி குழுமம் வழங்கிய பாண்டுகளை அடகு வைத்தோ, சொத்தாகவோ காட்ட முடியாது என்று அந்த வங்கி தெரிவித்துள்ளது. அமெரிக்க நிறுவனமான ஹிண்டன்பர்க் அண்மையில் அதானி குழும நிறுவனங்கள் பற்றி அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தது. ஆனால் அது எதுவுமே உண்மையில்லை என்று அதானி குழுமம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. எனினும் அதானி குழுமத்தின் மீது உலக நாடுகள் மற்றும் பெரிய நிறுவனங்களின் பார்வை மாறியிருக்கிறது என்று சொல்வது மிகையல்ல. ஏற்கனவே சிட்டி குழுமம்,கிரிடிட் சூய்சி உள்ளிட்ட நிறுவனங்கள் அதானி குழும பாண்டுகளை வாங்குவதில்லை என்ற முடிவுக்கு வந்துவிட்டன. இந்த சூழலில் இதன் தொடர்ச்சியாக தற்போது ஸ்டாண்டர்ட் சார்ட்டட் வங்கியும் இணைந்துள்ளது. இந்த முடிவு தற்காலிகமானது என்று தெரிவித்துள்ள வட்டாரங்கள், நிலைமை சீரானதும் ஒருவேலை அதானி குழும பத்திரத்தை வாங்க வங்கிகள் இசைவு தெரிவிக்கலாம் என்றும் கூறப்படுகிறது. சந்தையில் நிலையற்ற சூழல் நிலவும் நிலையில் fpoவெளியிடுவது சரியாக இருக்காது என்றும், பங்குச்சந்தையில் வெளியிடப்பட்ட பங்குகளை திரும்ப அளிக்கவும் அதானி முடிவெடுத்துள்ளார்.
முதலீட்டாளர்கள் நலனே பிரதானமானது என்று கூறிய கவுதம் அதானி,மற்றவை அனைத்தும் இரண்டாம்பட்சம்தான் என்றும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.