பதவிக் காலம் நீட்டிப்பு இல்லை – லிமாயே அறிவிப்பு..!!
என்எஸ்சியின் தலைமைச் செயல் அதிகாரி விக்ரம் லிமாயே, தனது பதவிக்காலத்தை ஜூலை மாதத்துக்கு பிறகு நீட்டிக்கப் போவதில்லை என்று தெரிவித்துள்ளார்.
தேசிய பங்குச் சந்தையின் தலைமை செயல் அதிகாரியாக விக்ரம் லிமாயே தற்போது பொறுப்ப வகித்து வருகிறார்.
” எனது பதவிக்காலம் 2022 ஜூலை 16 –ம் தேதியுடன் முடிவடைகிறது. இரண்டாவது பதவிக் காலத்தைத் தொடர எனக்கு விருப்பமில்லை . அதனால்,பதவி தொடர்பாக விண்ணப்பிக்கவோ அல்லது நடந்து கொண்டிருக்கும் செயல்பாட்டில் பங்கேற்கவோ மாட்டேன் என்று வாரியத்திடம் தெரிவித்து விட்டேன் ” என்று லிமாயே கூறியுள்ளார்.
முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி சித்ரா ராமகிருஷ்ணா தனது பதவிக் காலத்தை முடிக்காமல் ராஜினாமா செய்ததை அடுத்து லிமாயே ஐந்தாண்டு காலத்திற்கு நியமிக்கப்பட்டார். இணை-இருப்பிடம் மோசடி வழக்கில் சித்ரா தற்போது ஏழு நாட்கள் சிபிஐ காவலில் உள்ளார்.