ரிசர்வ் பேங்கிடம் இருந்து எந்த தகவல்களும் வரலயே…
கோடக் மகிந்திரா வங்கியின் சிஇஓவாக உதய் கோடக் இருக்கிறார்.இவர் அடுத்தகட்டமாக சில முன்னெடுப்புகளை செய்ய இருக்கிறார். இது குறித்து ரிசர்வ் வங்கியிடம் இருந்து எந்த தகவல்களும் வரவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது உதய் கோடகுக்கு பதிலாக அவரின் இடத்தில் யாரை வைப்பது என்பது குறித்து எந்த தரவுகளும் ரிசர்வ் வங்கியிடம் இருந்து வெளியாகவில்லை என்று உதய் கோடக் தெரிவித்துள்ளார். உதய் கோடக் ,கோடக் மகிந்திரா வங்கியின் சிஇஓ பதவியில் இருந்து இந்தாண்டுடன் விடை பெற்று வேறு பதவியை பெற உள்ளதாக பங்குச்சந்தை தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2022ஆம் ஆண்டு தரவுகளின்படி உதய் கோடக்கின் மகன் ஜெய் கோடக் சிஇஓ பதவிக்கு போட்டியிட வாய்ப்பே இல்லை என்று அந்த நிறுவனத்தின் இயக்குநரான கேவி எஸ் மணியன் தெரிவித்துள்ளார். Egon Zehnder என்ற நிறுவனத்தை கோடக் மகிந்திரா வங்கி அனுகி புதிய சிஇஓவை தேடும் பணியை தொடங்கிவிட்டதாக கடந்த பிப்ரவரி மாதம் தகவல் வெளியானது.
தற்போது இயக்குநராக இருக்கும் கே.வி.எஸ் மணியன் அல்லது மற்றொரு இயக்குநரான ஷாந்தி ஏகாம்பரம் ஆகிய இருவரில் யாரோ ஒருவர் அடுத்த சிஇஓ ஆக வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.