மாற்றமுடியாத பங்குகள்- டாடா சன்ஸ் விளக்கம்
டாடா குழுமத்தில் 66 விழுக்காடு பங்குகள் மட்டுமே டாடா அறக்கட்டளையால் நிர்வகிக்கிப்படுகிறது. மீதம் உள்ளவற்றில் 18.37 விழுக்காடு பங்குகள் ஷபூர்ஜி பலூன்ஜி குழுமத்தால் நிர்வகிக்கப்படுகிறது. இந்நிலையில் எஸ்பி குழுமம் வைத்துள்ள பங்குகள் மாற்ற முடியாதவை என்று டாடா அறக்கட்டளையின் மூத்த நிர்வாகிகள் கூறியுள்ளனர். மிஸ்திரி குடும்பத்தினர் தங்கள் வசம் உள்ள 18.37 % பங்குகளையும் அடகு வைத்து பணம் பெற்றுள்ளனர். இதற்கு முன்பு 3 முறை இதே பாணியில் டாடாவின் பங்குகளை அடகு வைத்து எஸ்பி குழுமத்தினர் பணம் பெற்றுள்ளனர். 1865 ஆம் ஆண்டு பலூன்ஜி மிஸ்திரி என்பவரால் எஸ்பி குழுமம் தொடங்கப்பட்டது. ரியல் எஸ்டேட், கட்டுமானம், உள்கட்டமைப்பு, சோலார் ஆற்றல்,எண்ணெய் மற்றும் எரிவாயு துறையில் இந்த நிறுவனம் வணிகம் செய்து வருகிறது. இந்த நிறுவனத்தின் செயல்பாடுகள் டாடா சன்ஸ் நிறுவனத்துடன் இணைந்தே பல ஆண்டுகள் பயணிக்கிறது. கடந்த 2016-ல் சைரஸ் மிஸ்திரி என்பவரை டாடா சன்ஸ் தலைவர் பதவியில் இருந்து நீக்கியது முதல் இரு குழுமத்துக்கும் இடையில் சட்டப்போராட்டம் தொடங்கியுள்ளது. நிலைமை இப்படி இருக்கையில் டாடா சன்ஸ் குழுமம் பக்கமே சட்ட ரீதியிலான அனைத்து உரிமைகளும் உள்ளன. எஸ்பி குழுமம் அடகு வைத்த டாடா பங்குகள் எதுவும் மாற்ற முடியாதவை என்றும் டாடா சன்ஸ் அதிகாரிகள் திட்டவட்டமாக தற்போது தெரிவித்துள்ளனர்.