நூடுல்ஸ் நாட்டுக்கு வந்த சோதனை..
உலக மக்கள் தொகையில் இந்தியா இப்போதுதான் சீனாவை மிஞ்சியிருக்கிறது. இந்த நிலையில் சீனாவுக்கு அடுத்தடுத்த சிக்கல்கள்வந்துகொண்டே இருக்கிறது என்றால் அது மிகையல்ல. இதன் ஒருபகுதியாக அண்மையில் சீனாவில் இருந்து வெளியாகியிருக்கும் தரவுகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் அளவு என்பது கணிசமாக குறைந்திருக்கிறது.தொடர்ந்து 3 ஆவது மாதமாக சீனாவின் ஏற்றுமதி பாதிப்பு 14.5% வீழ்ந்துள்ளது. இது ஆண்டுக்கு ஆண்டு மாறும் அளவில் கணிசமான தொகையாகும். இந்தளவுக்கு வீழ்ச்சி என்பது சீன வரலாற்றிலேயே 2020க்கு பிறகு பதிவாகும் குறைவான அளவாகும். உலகளவில் பல நாடுகளுக்கு பல பிரச்னை என்றால் சீனாவில் வேறுவகையான பிரச்னைகள் இருக்கின்றன. அதாவது உள்நாட்டுக்குள்ளேயே உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
உலகின் இரண்டாவது பெரிய பொருளாதார நாடான சீனாவின் இந்த நிலை உலகளவில் மிகமுக்கியமாக பார்க்கப்படுகிறது. பணியாற்றும் இளைஞர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளதும், கொரோனா, கனமழை மற்றும் வெளிநாடுகளில் நிலவும் மந்த நிலை உள்ளிட்ட காரணிகளால் சீனாவில் உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் ஏற்றுமதி அளவு கணிசமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.