140 கோடி பேராலயும் முடியாதாம்..
சீனாவில் 140 கோடி பேர் வசித்து வருகின்றனர். அந்நாட்டு மக்கள் தொகையில் உள்ள மக்கள் அனைவருக்கும் ஒரு வீடு கொடுத்தால் கூட பல வீடுகள் காலியாகவே இருக்கும் என்று அந்நாட்டு அதிகாரி ஒருவர் அதிர வைத்திருக்கிறார்.. 2021ஆம் ஆண்டு சீன கட்டுமானத்துறையில் பிரபல நிறுவனமான சீனா எவர் கிராண்டே நிறுவனம் திவால் ஆனது Country Garden Holdings என்ற நிறுவனமும் திவாலானது. விற்காமல் கிடக்கும் மொத்த இடப்பரப்பின் அளவு என்பது 700 கோடி சதுர அடியாக உள்ளதாக கூறினார். போதுமான நிதி இல்லாமல் பல கட்டடங்கள் கட்டி முடிக்கப்படாமல் இருப்பதாக கூறப்படுகிறது. 300 கோடி பேர் வசிக்கும் அளவுக்கு இடங்கள் காலியாக இருப்பதாக அந்நாட்டு புள்ளிவிவர துறை அதிகாரியான ஹி கெங் தெரிவித்துள்ளார். டோங்குவான் நகரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,இந்த அதிர வைக்கும் குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ளார். ரியல் எஸ்டேட் துறை மிக மோசமான பாதிப்பை சந்தித்துள்ளது. சீன அதிகாரிகள் சீனாவில் நிலைமை சீராக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தாலும் உண்மை நிலையை அதிகாரி ஒருவர் போட்டு உடைத்தது உலகளவில் கவனம் ஈர்த்திருக்கிறது.இந்த அளவிலும் உண்மையை சீன அரசு அதிகாரிகள் ஒப்புக்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.இப்போதும் புகார்களை சீன அரசு மறுத்து வருகிறது.