இலவசம் எல்லாம் இல்லைங்க..
உண்மையை விட பொய் வேகமாக பரவும் என்பார்கள் அதனை நிரூபிக்கம் வகையில் அண்மையில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.
ரிலையன்ஸ் குழுத்தின் தலைவரும், இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவருமான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பாணியின் திருமணம் நடந்து முடிந்தது. இந்நிலையில் இதனை கொண்டாடும் வகையில் 3 மாத இலவச ரீசார்ஜ் திட்டத்தை முகே் அம்பானியின் ஜியோ நிறுவனம் தர உள்ளதாக போலியாக ஒரு மெசேஜ் வாட்ஸ் அப்பில் வட்டமிட்டு வருகிறது. இந்தியில் இது எழுதப்பட்டுள்ளது. அந்த இலவச ரீசார்ஜ் பெற வேண்டுமெனில் லிங்கை கிளிக் செய்யுங்கள் என்று ஒரு மெசேஜ் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இது முற்றிலும் பொய் என்பது தெரியவந்துள்ளது. பொதுமக்கள் யாரும் எந்த போலியான தகவலையும் நம்ப வேண்டாம் என்றும் நிதியிழப்பு அபாயம் இருக்கும் என்றும் ஜியோ தரப்பில் கூறப்பட்டுள்ளது. அதிகாரபூர்வ இணையதளங்களின் வாயிலாக மட்டுமே ரீசார்ஜ் செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.