இந்தியாவில் சில்லறை விற்பனை கடைகள்.. No சொன்ன வால்மார்ட்..!!
இந்தியாவில் சில்லறை கடைகள் திறக்க மாட்டோம் என வால்மார்ட் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த வால்மார்ட் நிறுவனம் உலக அளவில் வணிக நிறுவனங்களில் முதன்மையானதாக உள்ளது. இந்நிலையில், இந்தியாவில் நேரடி சில்லறை விற்பனை நிலையங்களை திறக்க மாட்டோம் என்று வால்மார்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி டக் மெக்மில்லன் கூறியுள்ளார்.
இந்தியாவை சேர்ந்த ஆன்லைன் பணப்பரிவர்த்தனை நிறுவனமான ஃபோன் பே, ஆன்லைன் பொருட்கள் விற்பனை சந்தையான ஃப்ளிப்கார்ட் ஆகியவற்றை வால்மார்ட் வாங்கியுள்ளது. இதன் மூலம் வால்மார்ட் நல்ல வருமானத்தை ஈட்டி வருவதாகவும், மேலும் இணைய வழி பணப்பரிவர்த்தனைகளை அதிகரிக்க செய்யும் முயற்சியில் வால்மார்ட் ஈடுபட உள்ளதாகவும் தெரிவித்தார்.
வரவுள்ள காலங்களில் வால்மார்ட் நிறுவனம் புதிய நிறுவனங்களை வாங்குவதில் அதிக கவனம் செலுத்தி வருவதாகவும் டக் மெக்மில்லன் தெரிவித்துள்ளார்.