நோட்டு புழக்கம் அதிகமாகிடிச்சு..
நாட்டில் எந்த மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டு எவ்வளவு புழங்குகிறது என்பதை ரிசர்வ் வங்கி வெளியிடுவது வழக்கம், அப்படி இந்த முறை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள தகவலில் பல ருசிகரமான தகவல்கள் உள்ளன. அதாவது ஒட்டுமொத்த பணப்புழக்கம் என்பது 4.4% அதிகரித்துள்ளது. இதில் அதிக புழக்கத்தில் இருக்கும் நோட்டுகளே 500 ரூபாய் நோட்டுகள்தான் என்கிறது ரிசர்வ் வங்கி,அதாவது 5,163 கோடி அளவுக்கு 500 ரூபாய் நோட்டுகள் மக்கள் பயன்பாட்டில் உள்ளன. இதற்கு அடுத்த இடத்தில் 10 ரூபாய் மற்றும் 100 ரூபாய் நோட்டுகள் உள்ளன. இதன் மதிப்பு முறையே 2ஆயிரத்து 621 கோடி, மற்றும் ஆயிரத்து 805 கோடி நோட்டுகளாகவும் இருக்கிறது. நாட்டில் சுற்றி வரும் பணப்புழக்கம் என்பதில் 77 விழுக்காடு 500 ரூபாய் நோட்டுகளாகவே இருக்கிறது. இதன் மதிப்பு மட்டும் 33.48 லட்சம் கோடி ரூபாயாக இருக்கிறது. 500,200, 20 ரூபாய் நோட்டுகளின் புழக்கம்தான் அதிகரித்துள்ளதாக ரிசர்வ் வங்கி கூறுகிறது.அதிலும் குறிப்பாக 20 ரூபாய் நோட்டுகளின் புழக்கம் என்பது ஆயிரத்து 101 கோடயில் இருந்து 1,258 கோடியாக அதிகரித்துள்ளது. 200 ரூபாய் நோட்டுகள் மக்கள் கைகளில் செல்லும் அளவானது 4.6% அதிகரித்துள்ளது. அதாவது 626 கோடி நோட்டுகள் மக்கள் கைகளில் கிடைக்கின்றன. மக்கள் கைகளில் புரளும் பணத்தில் 37.9% 500 ரூபாய் நோட்டுகளும்,10 ரூபாய் நோட்டு புழங்கும் அளவு 19.2%ஆகவும் உள்ளது. இதேபோல் இ-ரூபாயின் அளவும் அதிகரித்துள்ளது. ஹோல்சேலில் டிஜிட்டல் ரூபாய் 10.69 கோடி ரூபாயாகவும், சில்லறையில் 5.70 கோடி ரூபாயாகவும் உள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. 2000 ரூபாய் நோட்டுகள் கணிசமாக குறைந்து வருவதாகவும் அந்த வங்கியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.