நோட்டீஸ் அனுப்பி இருக்காங்க!!!!
நிஜமாகவே பணத்தை வைத்து சூதாடும் 12 நிறுவனங்களுக்கு 55ஆயிரம் கோடி ரூபாய்க்கான வரி தொடர்பான விளக்கம் கேட்டு நோட்டீசை ஜிஎஸ்டி புலனாய்வுத்துறை அதிகாரிகள் அளித்துள்ளனர். இதில் அதிகபட்சமாக 25,000 கோடி ரூபாய்க்கான நோட்டீஸ் டிரீம் 11 நிறுவனத்துக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதேபோல் ஹெட் டிஜிட்டல் ஒர்க்ஸ்,பிளே கேம் 24*7 உள்ளிட்ட நிறுவனங்களுக்கும் நோட்டீஸ் பறந்துள்ளது.அளிக்கப்பட்டுள்ள நோட்டீசானது ஒரு டிரில்லியன் ரூபாய்க்கும் அதிகம் இருக்கும் என்கிறார்கள் நிபுணர்கள்.வரும் அக்டோபர் 1ஆம் தேதி முதல் சூதாட்டத்தில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு 28 %ஜிஎஸ்டி வசூலிக்கப்பட இருக்கிறது.கடந்தாண்டு பெங்களூருவைச் சேர்ந்த கேம்ஸ்கிராப்ட் நிறுவனத்துக்கு 21 ஆயிரம் கோடி ரூபாய்க்கான நோட்டிஸ் அளிக்கப்பட்டது. பின்னர் இந்த நோட்டீசை கர்நாடக அரசு ரத்துசெய்தது.இது தொடர்பான மேல்முறையீட்டு மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ளன. இதில் இறுதி தீர்ப்பும் வர இருக்கின்றன.இது மட்டுமின்றி சூதாட்ட விடுதிகளுக்கும் அந்த துறை நோட்டீஸை அளித்துள்ளது.ஜிஎஸ்டி வரி செலுத்தாத குற்றத்துக்காக டெல்டா கார்ப் என்ற நிறுவனத்துக்கு 11 ஆயிரத்து 139 கோடி ரூபாய்க்கான நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது.இதுவரை திறமை மற்றும் வாய்ப்புகள் அடிப்படையிலான கேம்களாக தனித்தனி விதி உள்ளது. இது வரும் 1 ஆம் தேதி முதல் அனைத்துக்கும் பொதுவாக ஒரே வரி விதிக்கப்பட இருக்கிறது.கோவா, சிக்கிம்,டெல்லி உள்ளிட்ட மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் கடந்த ஜூலையில் அதிகபட்ச ஜிஎஸ்டி அமலுக்கு வந்துள்ளது. ஆனால் வரும் 1 ஆம் தேதி முதல் அனைத்து வகை விளையாட்டுகளுக்கும் 28% ஜிஎஸ்டி விதிக்கப்பட இருக்கிறது. இது தொடர்பான மாற்றி அமைக்கப்பட்ட வரிச்சட்டத்துக்கு நாடாளுமன்றத்தில்ஒப்புதலும் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.