மாருதி சுசுக்கி நிறுவனத்துக்கு நோட்டீஸ்….
இந்தியாவின் மிகப்பெரிய கார் உற்பத்தி நிறுவனமாக மாருதி சுசுக்கி நிறுவனம் தகழ்கிறது. இந்த நிறுவனத்திற்கு அண்மையில் ஜிஎஸ்டி அதிகாரிகள் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். சில குறிப்பிட்ட சேவைகளில் வரிஏய்ப்பு நடந்திருப்பதாக கூறியுள்ள ஜிஎஸ்டி அதிகாரிகள், வட்டியுடன் தொகையை செலுத்த வேண்டும் என்று கோரியுள்ளனர். 2017 முதல் ஆகஸ்ட் 2022வரை குறிப்பிட்ட இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.139 கோடியே 30 லட்சம் ரூபாய் வரியாக கட்டியதாக சுசுக்கி நிறுவனம் ஜிஎஸ்டி அதிகாரிகளுக்கு தெரிவிக்கின்றனர். குறிப்பிட்ட இந்த நோட்டீசால் தங்கள் வர்த்தகத்தில் எந்த பாதிப்பும் இல்லை என்று மாருதி சுசுக்கி நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த 2006 முதல் 2011ஆம் ஆண்டுவரை இதே பாணியில் வந்த நோட்டீஸ்களுக்கு பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றங்கள் தடைவிதித்துள்ளதை மாருதி சுசுக்கி நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய கார் நிறுவனத்துக்கு தொடர்ந்து இது போன்ற அழுத்தம் தரப்படுவதாக நிபுணர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர். ஜிஎஸ்டி வரி விதிப்பு அமலானதில் இருந்து கார்களுக்கு குறிப்பிடத்தக்க அளவு வரியாக வசூலிக்கப்படுகிறது.ஜிஎஸ்டி வரியால் மத்திய அரசுக்கு பெரிய லாபம் மாதந்தோறும் கிடைத்து வரும் நிலையில் அவ்வப்போது இது போன்ற நிறுவனங்களுக்கு நோட்டீஸ்களையும் அனுப்பி விளக்கம் கேட்டு வருவது குறிப்படத்தக்கது.