இனி 5% நஹி, 20%….
இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு சென்று பொழுதை கழிக்க விரும்புவோருக்கும்,வெளிநாடுகளுக்கு படிக்க செல்வோருக்கும் பேரிடியாக அமைந்துள்ளது. ஆதார வரி எனப்படும் Tax collected at sourceஎனப்படும் டிசிஎஸ். ஒரு நிதியாண்டில் இந்தியாவின் 7 லட்சம் ரூபாய்க்கும் அதிகமான தொகையை நீங்கள் வெளிநாட்டில் செலவு செய்தால் இந்த வகை டிசிஎஸ் வசூலிக்கப்பட்டும். 7 லட்சம் ரூபாய்க்குள் எந்த வரியும் கிடையாது. ஆனால் வெளிநாட்டு நிதிநிறுவனங்களில் முதலீடு செய்தோ,பங்குச்சந்தைகளில் முதலீடு செய்தாலோ 7 லட்சத்துக்கு மேல் கடந்த மாதம் வரை 5%எல்ஆர்எஸ்பிரிவில் டிசிஎஸ் விதிக்கப்பட்டது. கடந்த பட்ஜெட்டில் இந்த வகை எல்ஆர்எஸ் 20%ஆக உயர்த்தப்படும் என்று அறிவிப்பு வெளியாகியிருந்தது.இதன்படி 7 லட்சத்தை கடக்கும் ஒவ்வொரு ரூபாய்க்கும் 20%’Tcs வசூலிக்கப்படும்.இந்த வகை டிசிஎஸ் வரி செலுத்திவிட்டால் அதனை எளிதாக வருமான வரியில் கணக்கு தாக்கல் செய்ய இயலும். வெளிநாட்டு நிறுவனங்களில் டிசிஎஸ் தவிர்க்கவும் வழி உள்ளது. அதாவது வெளிநாட்டு மியூச்சுவல் பண்டுகளில் பணம் போடலாம் இதற்கு டிசிஎஸ் கிடையாது.ஒருவேளை டிசிஎஸ் பிடித்தம் செய்யப்பட்டிருந்தால் வருமான வரி தாக்கல் செய்யும்போது 26ஏஎஸ் என்ற பிரிவில் பயன்படுத்தி பலன் பெறலாம்.