இனி சிங்கப்பூருக்கு நொடிகளில் பணம் அனுப்பலாம்….
இந்தியாவில் உள்ள யுபிஐ போலவே சிங்கப்பூரில் பே நவ் என்ற வசதி உள்ளது. இந்த இரு பணபரிவர்த்தனை முறைகளையும் இணைத்து இருநாடுகளுக்கு இடையே பண பரிவர்த்தனை செய்யும் வசதி பிப்ரவரி 21ம் தேதி துவங்கியுள்ளது.பிரதமர் மோடியும், சிங்கப்பூர் பிரதமர் லீ ஹிசியன் லூங்கும் இதற்கான நிகழ்ச்சியில் பங்கேற்றனர். எந்தெந்த வங்கிகளில் இந்த வசதி உள்ளது? SBI,IOB,indian bank,icici வங்கிகளில் இருவழியாக (பணம் அனுப்பவும் பெறவும்)முடியும், முதல்கட்டமாக ஆக்சிஸ் மற்றும் டிபிஎஸ் வங்கிகளில் பணத்தை பெற மட்டும் முடியும், வரும் நாட்களில் கூடுதல் வங்கிகளை இணைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்திய மதிப்பில் ஒரு நாளில் அதிகபட்சம் 60 ஆயிரம் ரூபாய் மட்டுமே அனுப்பவோ, பெறவோ முடியும். 24 மணி நேரமும் இயங்கும் வகையில் இந்த இணைப்பு செய்யப்பட்டுள்ளது. இந்தியா-சிங்கப்பூரில் குறிப்பிட்ட வங்கிகளின் கணக்கு வைத்திருப்போர் எளிதாக பணம் அனுப்பிக்கொள்ள முடியும் இந்த சேவைக்கு சேவைகட்டணமாக குறிப்பிட்ட தொகை வசூலிக்கப்படுகிறது. தற்போதுள்ள சேவைக் கட்டணத்தை விட குறைவான கட்டணத்தில் பணம் அனுப்பிக்ககொள்ள முடியும் என்று கூறப்பட்டுள்ளது