5.9% ஆகக் குறைந்த வங்கிகளின் NPA
ஆறு ஆண்டுகளில் வங்கிகளின் மொத்த செயல்படாத சொத்து (NPA) விகிதம் எப்போதும் இல்லாத 5.9% ஆகக் குறைந்துள்ளது என்று இந்திய ரிசர்வ் வங்கி நிதி நிலைத்தன்மை அறிக்கையில் தெரிவித்துள்ளது.
வியாழக்கிழமை வெளியான அறிக்கையில் மார்ச் 2022 டன் முடிவடைந்த ஆண்டில் வங்கிகளின் நிகர செயல்படாத சொத்துக்களின் விகிதம் 1.7 சதவீதமாகக் குறைந்துள்ளது.
பணவீக்க அழுத்தங்கள், புவிசார் அரசியல் அபாயங்கள் ஆகியவை கவனமாகக் கையாளப்பட வேண்டும் என்றாலும், பொருளாதாரம் மீட்சிப் பாதையில் உள்ளது என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைனில் நடக்கின்ற போர், உயரும் பொருட்களின் விலைகள், விநியோகச் சங்கிலி சீர்குலைவுகள் மற்றும் இருண்ட வளர்ச்சி வாய்ப்புகள் ஆகியவற்றின் காரணமாக கணிசமான நிச்சயமற்ற தன்மையால் வளர்ச்சியானது மறைக்கப்பட்டுள்ளது என்று ரிசர்வ் வங்கியின் அறிக்கை மேலும் கூறியது.