பங்குச்சந்தை – இந்த வாரம் எப்படி இருந்தது?
இந்திய பங்குச்சந்தைகள் இந்த வாரம் முழுவதும் ஏற்றத்துடன் வணிகத்தை நிறைவு செய்து உள்ளன. இன்று மட்டும் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 390 புள்ளிகள் அதிகரித்து 56 ஆயிரத்து 72 புள்ளிகள் என்ற நிலையிலும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 114 புள்ளிகள் அதிகரித்து 16 ஆயிரத்து 719 புள்ளிகள் என்ற நிலையிலும் வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளன.
இந்த வாரத்தில் மட்டும் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் சுமார் 2000 புள்ளிகளுக்கு மேல் அதிகரித்துள்ளது. இந்த ஏற்றம், இனி வரும் வாரங்களில் தொடருமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அடுத்த வாரம் ஃபெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தை அதிகரிக்கும் என்ற எதிர்பார்க்கப்படும் நிலையில், அடுத்த வாரம் பங்குச்சந்தைகள் சரிவுடன் இருக்க வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
கச்சா எண்ணெய் விலை 97 டாலர் என்ற நிலையில் இருப்பது இந்த வார சந்தையின் ஏற்றத்திற்கு முக்கிய காரணமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.